Read in English
This Article is From Jul 26, 2018

ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைப்படை தாக்குதலுக்கு சிரியாவில் 220 பேர் பலி

ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலுக்கு சிரியாவின் ஸ்வெய்தா பகுதியை சேர்ந்த 220 பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement
உலகம்
Beirut, Lebanon:

லெபனான்: ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலுக்கு சிரியாவின் ஸ்வெய்தா பகுதியை சேர்ந்த 220 பேர் உயிரிழந்துள்ளனர். 

சிரிய அரசு நிர்வாகித்து வரும் தெற்கு சிரிய பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளது. தற்கொலை படையை சேர்ந்த நான்கு பேர், ஸ்வெய்தா கிராம பகுதியில் தாக்குதல் நடத்தியதில்,  221 கொல்லப்பட்டுள்ளனர். இதில் 127 பொது மக்களும், 98 வீரர்களும் அடங்குவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காலை 5.30 மணிக்கு தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. தீவிர தாக்குதலால் காயமடைந்த பலரும் ஸ்வெய்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஸ்வெய்தாவில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு சிரிய குடியரசு தலைவர், பஷர் அல் ஆசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Advertisement

கடந்த 2011 - ஆம் ஆண்டு தொடங்கிய சிரிய போரில், 350000 பேர் உயிரிழந்தனர். பல மில்லியன் மக்கள் இடம் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement