This Article is From Dec 30, 2019

'பாஜகவை ஓரம்கட்டுங்கள்' - அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு!!

தேசிய மக்கள்தொகை பதிவேடு எனப்படும் என்.பி.ஆர்.யை அப்டேட் செய்வதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.இங்கு ஏற்கனவே, என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

'பாஜகவை ஓரம்கட்டுங்கள்' - அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு!!

அமைதியான முறையில் யார் போராட்டம் நடத்தினாலும் அவர்கள் தேச விரோதிகள் என்று சித்தரிக்கப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்

Purulia:

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் மேற்கு வங்க மாநிலம் புருளியாவில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அனைத்து மட்டங்களிலும் பாஜகவை ஓரங்கட்ட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார். 

இந்தியாவில் சட்டப்பூர்வமாக இருக்கும் குடிமக்களை வெளியேற்றுவதற்கு பாஜக முயற்சி எடுப்பதாக குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் என்.பி.ஆர். யை அப்டேட் செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் என்.பி.ஆர். பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புருளியா நகரில், 5 கிலோ மீட்டர் பேரணியை தொடங்கி வைப்பதற்கு முன்பாக மம்தா பானர்ஜி பேசுகையில், 'சட்டப்பூர்வமாக இந்தியாவில் இருக்கும் குடிமக்களை வெளியேற்றுவதற்கு பாஜக முயற்சி செய்கிறது. பாஜகவை அனைத்து மட்டங்களிலும் ஓரங்கட்ட வேண்டும். இதற்காக அரசியல் கட்சிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்' என்று பேசினார். 

அமைதியான முறையில் யார் போராட்டம் நடத்தினாலும், அவர்கள் தேச விரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று மத்திய அரசை மம்தா கடுமையாக விமர்சித்தார். 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், 'குடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறப்படும் வரையில் நான் எனது போராட்டத்தை நிறுத்த மாட்டேன். வாக்காளர் பதிவேட்டில் மட்டும் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். யாரும் இந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள்' என்று தெரிவித்தார். 

.