Read in English
This Article is From Sep 07, 2019

விரும்பியது ஏதும் கிடைக்கவில்லை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன் -இஸ்ரோ தலைவர் சிவன்

வழக்கமாக ஒவ்வொருவரும் கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வெவ்வேறு விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் எனது அப்பா என் வீட்டிற்கு அருகில் இருக்கிற கல்லூரியை தேர்ந்தெடுந்தார். அப்போதுதான் அவருக்கு உதவ முடியும்.

Advertisement
இந்தியா Posted by

இந்தியாவின் இஸ்ரோவின் தலைவரான  டாக்டர் கே.சிவனின் வாழ்க்கை கந்தல் துணியிலிருந்து தொடங்கிறது. ஒரு சிறு விவசாயின் மகன் கல்லூரியில் படிக்கும் வரை செருப்பு கூட அணியாமல் இருந்துள்ளார். சந்திராயன் 2 பணியில் சிவனின் ஆழ்ந்த அர்ப்பணிப்புதான் கட்டுப்பாட்டு மையத்தில் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீரை விடச் செய்தது. விக்ரம் லேண்டர் தரையிரங்கும் போது கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பினை இழந்தது. 

டாக்டர் சிவன் தனது மாணவ வாழ்க்கையின் பெரும்பகுதி ஒரு ஜோடி கால்சட்டை கூட வைத்திருக்கவில்லை. வேட்டியினை அணிந்து சென்றுள்ளார். ஆனால் வாழ்வின் கஷ்டங்கள் ஏதும் இலக்குகளை அடைவதைத்  தடுக்க முடியவில்லை. ஆகஸ்ட் 26 அன்று இஸ்ரோ தலைமையகத்தில் ஒரு நேர்காணலில் NDTVக்கு கொடுத்த நேர்காணலில் இதை தெரிவித்தார். வாழ்வில் எனக்கு கிடைக்காதப் பற்றி நான் கவலைப்படவில்லை.

“எங்கள் கிராமத்தில் நாங்கள் விவசாய பண்ணைகளில் வேலை செய்துள்ளோம். என் தந்தை ஒரு விவசாயி. கோடைக் காலத்தில் மாந்தோப்பில் உதவிக்குச்  செல்வோம். என் தந்தை வேலைக்கு தொழிலாளர்களை வைத்துக் கொள்ள மாட்டார்” என்று சிவன் கூறினார். கல்லூரிக் காலத்தில் டாக்டர் சிவன் தனது தந்தைக்கு உதவி செய்வார்.

Advertisement

“வழக்கமாக ஒவ்வொருவரும் கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வெவ்வேறு விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் எனது அப்பா என் வீட்டிற்கு அருகில் இருக்கிற கல்லூரியை தேர்ந்தெடுந்தார். அப்போதுதான் அவருக்கு உதவ முடியும். எங்களின் வீட்டு வருமானம் கைக்கும் வாய்க்கும் சரியாக இருந்தது என்கிறார்.

Advertisement

“நான் மெட்ராஸ் இண்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் படிக்கத் தொடங்கியபோதுதான் செருப்பு அணிய ஆரம்பித்தேன். அதுவரை வெறுங்காலுடன் தான் நடந்து கொண்டிருந்தேன். எங்களிடம் கால்சட்டை கூட இல்லை. நாங்கள் எப்போதும் வேஸ்டி மட்டுமே அணிந்திருந்தோம்” என்று சிவன் மாறா புன்னகையுடன் நினைவு கூர்ந்தார்.

Advertisement

தனது ஆரம்ப வாழ்க்கையில் பல கஷ்டங்களை எதிர்கொண்டாலும் 3 வேளை உணவினை வழங்கிய பெற்றோருக்கு சிவன் நன்றி தெரிவித்தார். “எங்கள் வாழ்க்கை அவ்வளவு மோசமாக இல்லை. எங்கள் பெற்றோர் ஒரு நாளைக்கு மூன்று வேளை வயிறார உணவு வழங்க முடிந்தது” என்று அவர் கூறினார். தனது தந்தையால் தனது பொறியியல் படிப்புக்கு நிதியளிக்க முடியாததால் இளங்கலை அறிவியல் படிப்பைத் தொடர வேண்டும். “நான் பொறியியல் படிக்க விரும்பினேன். ஆனால் என் தந்தையால் செலவிட முடியாததால் இளங்கலை அறிவியல் படித்தேன்.

என் அப்பாவின் மனதை மாற்ற ஒரு வாரம் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன். ஆனால் கடைசியில் என் மனதைத்தான் மாற்றிக் கொண்டேன் என்று சிவன் தெரிவித்தார். இளங்கலை கணிதம் செய்தேன். அதன் பின் தந்தை நிலத்தை விற்று பொறியியல் படிப்பு பணம் கொடுப்பதாக கூறினார். அதன்பின், பிடெக் படித்தேன். பின் வேலையில்லாமல் கஷ்டப் பட்டேன். ஏனென்றால் அந்த சமயத்தில் ஏரோநாட்டிக்கல் படிப்புக்கான வேலை மிகவும் குறைவாகவே இருந்தது. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட், நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றில் மட்டுமே நோக்கம் இருந்தது. அதன் பின் ஐ.ஐ.எஸ்சியில் மேல் படிப்புக்கு சென்றேன்.

Advertisement

டாக்டர் சிவனுக்கு தனது முழுவாழ்க்கையிலும் அவர் விரும்பியதையேதும் பெறவில்லை. ஆனால் அவருக்கு கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக செய்தார். “நான் செயற்கைக்கோள் மையத்தில் சேர விரும்பினேன். ஆனால், எனக்கு விக்ரம் சரபாய் மையம் கிடைத்தது. அங்கேயும் நான் ஏரோடைனமிக்ஸ் குழுவில் சேர விரும்பினேன். ஆனால் நான் பி.எஸ்.எல்.வி திட்டத்தில் சேர முடிந்தது. எல்லா இடங்களிலும் நான் விரும்பியது ஏதும் கிடைக்கவில்லை” என்று சிவன் தெரிவித்தார். 

Advertisement