This Article is From Dec 28, 2018

10,000 கோடி செலவில் 3 இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்! - மத்திய அரசு ஒப்புதல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தி 3 பேரை விண்வெளிக்கு அனுப்புகிறது.

இஸ்ரோவின் ககன்யான் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் 4வது நாடாக இந்தியா விளங்கும்.

New Delhi:

ககன்யான் திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து 3 விண்வெளி வீரர்கள் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று மாலை தெரிவித்துள்ளார். ரூ.10,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் 4வது நாடாக இந்தியா விளங்கும். 7ஆவது சுதந்திர தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரையில், ககன்யான் திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை பயன்படுத்தி 3 பேரை விண்வெளிக்கு அனுப்புகிறது.

இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியிருந்ததாவது, கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை நிறைவோற்றுவோம் என கூறியுள்ளார்.

இஸ்ரோ அட்டவணைப்படி, ஆளில்லாமல் செயல்படுத்தப்படும் முதலிரண்டு திட்டங்கள் அடுத்த 30-இல் இருந்து 36 மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் மூன்றாவது திட்டம் 40 மாதங்களுக்குள் அதாவது 2021-ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

.