Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 29, 2018

மிகத் துல்லியமாக பூமியைப் படமெடுக்கும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது இந்தியா..!

ISRO HysIS PSLV-C43:பூமியை மிகத் துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்ட செற்கைக்கோளை இஸ்ரோ, பிஎஸ்எல்வி- சி43 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது

Advertisement
இந்தியா

ISRO XX PSLV-C43 XX HysIS:ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து, பிஎஸ்எல்வி- சி43 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

Sriharikota:

பூமியை மிகத் துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்ட செற்கைக்கோளை இஸ்ரோ, பிஎஸ்எல்வி- சி43 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. ராக்கெட்டில், 31 செயற்கைக்கோள்கள் பொறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ராக்கெட்டில் இருக்கும் செயற்கைக்கோள்கள் பல, 8 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவையாகும். அதிக செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். 

ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து, பிஎஸ்எல்வி- சி43 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

இது குறித்து இஸ்ரோ, ‘ஹெ.ஒய்.எஸ்.ஐ.எஸ், பிஎஸ்எல்வி- சி43 ராக்கெட்டின் பிரதான செயற்கைக்கோள் ஆகும். அதன் மூலம், பூமியை மிகத் துல்லியமாக படம் பிடிக்க முடியும். இந்த செயற்கைக்கோளின் வாழ்க்கை காலம் 5 ஆண்டுகள் ஆகும்' என்று தெரிவித்துள்ளது. 

Advertisement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோதான், ஒரே ராக்கெட்டில் அதிக செயற்கைக்கோள் அனுப்பிய சாதனையைப் புரிந்துள்ளது. பிப்ரவரி 15, 2017 அன்று, இஸ்ரோ ஓரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பியது. 

ஹெ.ஒய்.எஸ்.ஐ.எஸ் செயற்கைக்கோள் பற்றி பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன், ‘ஹெ.ஒய்.எஸ்.ஐ.எஸ் போன்ற செற்கைக்கோள் மிகவும் அதி நவீன தொழில்நுட்பத் திறன் கொண்டது. அதைப் போன்ற ஒரு செயற்கைக்கோளை மிகச் சில நாடுகளே வைத்துள்ளன. பல நாடுகள் அதைப் போன்ற செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளன' என்று கூறினார். 

Advertisement

 

Advertisement