हिंदी में पढ़ें Read in English
This Article is From Sep 18, 2019

Chandrayaan 2 : நன்றி தெரிவித்த இஸ்ரோ

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நாட்கள் விரைவில் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Posted by

வரலாற்று சிறப்பு மிக்க தரையிறங்கும் முயற்சி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பாராட்டப்பட்டது. (File)

New Delhi:

சந்திராயன் 2 விண்கலனின் லேண்டர் விக்ரம் உடனான தகவல் தொடர்பு அது நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் முன் தகவல் தொடர்பை இழந்த நிலையில் இந்திய விண்வெளி மையம் மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

"எங்களுக்கு ஆதரவாக நின்றதற்கு நன்றி. நம்பிக்கைகள் மற்றும் உலகெங்கும் உள்ள இந்தியர்களின் கனவுகள் அளிக்கும் உத்வேகத்தால் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம்," என்று செவ்வாய் இரவு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரலாற்று சிறப்பு மிக்க தரையிறங்கும் முயற்சி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பாராட்டப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். 

 சந்திராயன் 2இன் ஆர்ப்பிட்டர் விக்ரம் லேண்டரின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளதாகவும் விக்ரம் விழுந்த இடத்தை கண்டு பிடித்து விட்டதாகவும் செப்டம்பர் 8ஆம் தேதி இஸ்ரோ அறிவித்திருந்தது.   

Advertisement

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நாட்கள் விரைவில் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement