বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 27, 2019

சந்திராயன் -2 எடுத்த நிலவு பள்ளங்களின் புகைப்படங்கள் : இஸ்ரோ வெளியிட்டது

இந்த பள்ளங்களுக்கு சிறந்த விஞ்ஞானிகள், வானியலாளர்கள் மற்றும் இயற்பியலாளர்கள் ஆகியோரின் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Translated By

சுமார் 4,375 கி.மீ உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Bengaluru:

சந்திரனைச் சுற்றி வரும் சந்திராயன் -2  சந்திரன் மேற்பரப்பில் உள்ள சில பள்ளங்களைக் காட்டும்  புகைப்படங்களை எடுத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. 

படங்களை பகிர்ந்த இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் சந்திராயன்  விண்கலத்தினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோமர்ஃபீல்ட், கிர்க்வுட், ஜாஜ்சன், மாக், கொரோலெவ், மித்ரா, பிளாஸ்கெட், ரோஜ்டெஸ்ட்வென்ஸ்கி மற்றும் ஹெர்மைட் ஆகிய பள்ளங்களின் புகைப்படங்கள் என்று கூறினார்.

இந்த  பள்ளங்களுக்கு சிறந்த விஞ்ஞானிகள், வானியலாளர்கள் மற்றும் இயற்பியலாளர்கள் ஆகியோரின் பெயரிடப்பட்டுள்ளது. 

அயனோஸ்பியர் மற்றும் ரேடியோபிசிக்ஸ் துறையில் முன்னோடி பணிகளுக்காக அறியப்பட்ட இந்திய இயற்பியளார் பத்ம பூஷன் விருது பெற்ற பேராசிரியர் சிசிர் குமார் மித்ராவில் பெயரை கிராட்டர் மித்ரா எனப் பெயரிப்பட்டது.

Advertisement

சந்திர மேற்பரப்பின் இந்த புகைப்படங்கள் ஆகஸ்ட் 23 அன்று சந்திராயன் -2 நிலப்பரப்பு கேமரா -2 மூலம் சுமார் 4,375 கி.மீ உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

சந்திராயன் -2 எடுத்த  சந்திரன் முதல் புகைப்படம் ஆகஸ்ட் 22 அன்று இஸ்ரோவால் வெளியிடப்பட்டது. 

Advertisement

Advertisement