விண்வெளி மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து இன்று பிற்பகல் 3:25 மணிக்கு ராக்கெட்டினை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
Chennai: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ இன்று செயற்கைக்கோள் RISAT-2BR1 பி.எல்.எஸ்.வி.சி-48 ராக்கெட் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளியில் ஏவப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து இன்று பிற்பகல் 3:25 மணிக்கு ராக்கெட்டினை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இன்றைய ராக்கெட் ஏவப்படுவது மிகமுக்கியமான மைல்கல்லை எட்டும். பி.எஸ்.எல்.வியின் 50வது விமானமாகவும் ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து 75வது வாகன பயணமாகவும் இருக்கும்.
628 கிலோ எடையுள்ள ரேடார் இமேஜிங் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் துல்லியமான வானிலை தரவுகளை பெறும் விதமாக இஸ்ரோ செயற்கை கோளை உருவாக்கியுள்ளது.
இந்த செயற்கை கோளுடன் சேர்ந்து ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோள் , அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைகோள்கள் வர்த்தக ரீதியில் விண்ணில் ஏவப்படவுள்ளன.