விஷ்ணு விஷ்வநாத் (29), மீனாட்சி மூர்த்தி (30) இருவரும் கலிபோர்னியாவில் பிரபலமான இடத்தில் இருந்து விழுந்து இறந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- யோசிமேசட்டே பூங்காவில் இந்திய தம்பதி உயிரிழந்தனர்
- தம்பதியைத் தேட பைனாகுலர், ஹெலிகாப்டர் பயன்படுத்ததப்பட்டது
- தம்பதி 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்; ஐ.டி துறையில் பணியாற்றினார்
New York: அமெரிக்கவில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த இரு ஐ.டி ஊழியர்கள் 800 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தது மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அவர்கள் இறப்பதற்கு முன்பு மலை உச்சி ஓரத்தில் நின்று செல்ஃபி எடுத்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஷ்ணு விஷ்வநாத் (29), மீனாட்சி மூர்த்தி (30) இருவரும் கலிபோர்னியாவில் இருக்கும் யோசிமட்டே பூங்காவில் இருக்கும் 'டாப்ட் பாயிண்ட்' எனப்படும் பிரபலமான இடத்தில் இருந்து விழுந்து இறந்துள்ளனர். அவர்கள் இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகள் என்பது கடந்த திங்கட்கிழமை அறியப்பட்டுள்ளது.
விஷ்வநாத்தின் சகோதரர் ஜிஷ்ணு விஷ்வநாத் கூறுகையில், " அவர்கள் இறப்பற்கு முன்பு செல்ஃபி எடுத்துகொண்டிருந்ததாக தான் தெரிகிறது. அந்த பூங்காவில் இருக்கும் பிரபலமான வியூபாயிண்ட் அது" என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
"கடந்த வியாழக்கிழமை அந்தப் பூங்காவின் மீட்புப் பணியில் ஈடுப்பட்டவர்கள் இவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். அப்போது கேமரா, ட்ரைப்பாட் போன்றவை அந்த உச்சியில் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்". மீனாட்சி, போட்டோ எடுப்பதற்காக ட்ரைபாட் அமைத்து வைத்திருந்துள்ளார். மீட்பு பணியில் இருந்தவர்கள் அவர்கள் உடல்களை மீட்க பைனாகுலர்கள் மற்றும் ஹெலிகாப்டர் பயன்படுத்தியுள்ளனர்" என்றார் ஜிஷ்ணு.
இறந்த தம்பதியினர், ஒவ்வொரு முறை அவர்கள் பயணம் மேற்கொள்ளும் போது, அந்த விவரங்கள் மற்றும் அனுபவங்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். பயண அனுபவங்களை பகிர்வதற்காகவே தனியாக ஒரு பக்கம் வைத்திருந்தனர். அந்தப் பக்கத்துக்கு "Holidays and Happily Everafters" என்று பெயர் வைத்திருந்தனர்.
இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மலை உச்சியில் இருந்து போட்டோக்கள் எடுப்பதில் இருக்கும் ஆபத்துக் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய போட்டோ ஒன்றை பதிவிட்டு, " எல்லோருக்கும் இப்படி புகைப்படம் எடுக்க பிடிக்கும்தானே. மலை உச்சி ஓரத்தில் நின்று, சாகசம் செய்வது. ஆனால், இதில் இருக்கும் ஆபத்தை உணருங்கள். ஒரு புகைப்படத்துக்காக உயிரை பணயம் வைப்பது சரியா?" கூறியிருந்தார்.
இந்த விபத்தில் இறப்பதற்கு முன்பு, அங்கு புகைப்படம் எடுத்துகொண்டிருந்த இன்னொரு தம்பதியின் செல்ஃபியில் மீனாட்சி தற்செயலாக படமெடுக்கப்பட்டிருந்தார். இவர்கள் இறந்ததை உறுதி செய்த பிறகு, அங்கு இருந்த மட்டிசன் "தன்னுடைய செல்ஃபிக்கள் இரண்டில் மீனாட்சி உள்ளார்" என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், " மீனாட்சியில் பிங் நிற தலைமுடி தன்னுடைய புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. அவர் உச்சியின் ஓரத்தில் நின்றிருந்தபோது சிறிது பதற்றத்துடன் காணப்பட்டார். ஆனால், அவர் அந்த இடத்தில் சரியாக நின்றிருந்ததாகதான் தோன்றியது" என்றார்.
பூங்காவின் பணியாற்றும் ஜேமி ரிச்சர்ட் இதுகுறித்து பேசியபோது, " அவர்கள் எதனால் விழுந்தார்கள் என்ற காரணம் தெரியவில்லை ஆனால், இந்த சம்பவம் மிகவும் சோகத்தை அளிக்கிறது" என்றார்.
மேலும் அவர், " இந்தப் பூங்காவில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள், அதில் ஆறு பேர் மலை உச்சியில் இருந்து விழுந்துள்ளார்கள்"
யோசிமட்டே ஒரு காட்டுப் பகுதி. பார்க்க மிகவும் அழகான இடம். நடக்கும்போது நம் கால் தடத்தில் கவனம் இல்லையென்றால் ஆபத்து நிச்சயம். இந்தச் சம்பவத்தின் சரியான காரணம் இன்னும் தெரியாததால், சுற்றாலவுக்கு வந்தவர்களுக்கு எச்சரிக்கை அளித்து வருகிறோம்" என்றார்.
இந்தத் தம்பதினர் கடந்த 2014-ஆண்டு காதல் திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் ஐ.சி கம்பெனியில் பணியாற்றி வருகிறார்கள். விஷ்ணுவின் பேஸ்புக் கவர் போட்டோவில் இருவரும், 'கிராண்ட் கேன்யன்' என்ற இடத்தில் இருக்கும் உச்சிமேல் இருக்கும் இடத்தில் எடுத்த படத்தைதான் வைத்துள்ளார்.
செங்கனூரில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில், 2006-2010 ஆண்டு படித்துள்ளனர். "இந்தத் தம்பதியினருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை கல்லூரியினர் தெரிவித்துள்ளர்.
விஷ்ணுவுடன் பணியாற்றிய ராஜ் கட்டா என்பவர், " விஷ்ணு மிகவும் புத்திசாலி, ரொம்பவும் பாசமானவர். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதி. எப்போதும் உற்சாகமாக இருக்கக் கூடியவர்கள். மீனாட்சி, எப்போது புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடைவர். பயணங்களில் மகிழ்ச்சி அடையக் கூடியவர்" என்றார்.
"கடந்த 6 மதங்களுக்கு முன்பு சிஸ்கோவுக்கு வேலை மாற வேண்டும் என்றும், இன்னும் ஒரு வருடம் வரைக்கும் கலிபோர்னியாவில் இருக்கப் போவதாக கூறியிருந்தார்" என்றார் ராஜ் கட்டா.