This Article is From Dec 02, 2018

டெல்லியில் 100 லாக்கர்களில் கட்டுக் கட்டாக சிக்கிய ‘ஹவாலா’ பணம்..!

தலைநகர் டெல்லியில் இன்று வருமான வரித் துறையினர், நடத்திய அதிரடி ரெய்டில் 25 கோடி ரூபாய் அளவுக்கு ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

டெல்லியில் 100 லாக்கர்களில் கட்டுக் கட்டாக சிக்கிய ‘ஹவாலா’ பணம்..!

நகரத்தின் 8 இடங்களில் ரெய்டு நடந்ததாக தெரிகிறது.

ஹைலைட்ஸ்

  • 8 இடங்களில் ரெய்டு நடந்துள்ளது.
  • பணம், ஹவாலா தரகர்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.
  • இந்த ஆண்டு ஐடி நடத்தும் 3வது ‘லாக்கர் ஆபரேஷன்’ இதுவாகும்
New Delhi:

தலைநகர் டெல்லியில் இன்று வருமான வரித் துறையினர், நடத்திய அதிரடி ரெய்டில் 25 கோடி ரூபாய் அளவுக்கு ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நகரத்தின் 8 இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று திடீரென்று ரெய்டு நடத்தினர். இதையடுத்து டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த பண அறையை கண்டு பிடித்துள்ளனர் ஐடி துறையினர்.

அந்த அறையில் 100 லாக்கர்கள் இருந்துள்ளதும், அந்த லாக்கர்களில் கட்டுக் கட்டாக பணம் இருந்ததும் சோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தப் பணத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய்க்கு இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

 

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஹவாலா தரகர்கள், ரகசிய அறையில் பணத்தை பதுக்கி வைத்திருக்கக் கூடும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு வருமான வரித் துறையால் நடத்தப்படும் மூன்றாவது ‘லாக்கர் ஆபரேஷன்' இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த செப்டம்பரில், அமலாக்கத் துறை, ஹவாலா பணப் பதுக்கல் குறித்துத் தகவல் வந்ததையடுத்து, டெல்லி மற்றும் மும்பையில் பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது 29 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணமும், பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்படன.

.