இந்த ரெய்டு குறித்தும், கைப்பற்றப்பட்ட பணம் குறித்தும் பேசியுள்ள துரைமுருகன், ‘கைப்பற்றப்பட்ட பணம் எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமானது அல்ல’ என்று மட்டும் கருத்து கூறியுள்ளார்.
வேலூரில் உள்ள சிமென்ட் குடோன் ஒன்றில் சில நாட்களுக்கு வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 11.53 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திமுக பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த, இந்த முறை வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பணப் பட்டுவாடா செய்ய குடோனில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை, காட்பாடியில் இருக்கும் துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அந்த ரெய்டின் போது, 10.50 லட்ச ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத பணத்தை ஐடி துறையினர் கைப்பற்றியிருக்கக் கூடும் எனப்படுகிறது. கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிமென்ட் குடோனில் கைப்பற்றப்பட தொகை குறித்த அறிக்கையை வருமான வரித் துறை, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கையால் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ரெய்டு குறித்தும், கைப்பற்றப்பட்ட பணம் குறித்தும் பேசியுள்ள துரைமுருகன், ‘கைப்பற்றப்பட்ட பணம் எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமானது அல்ல' என்று மட்டும் கருத்து கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)