বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 04, 2020

ஏழைகளின் பசியைப் போக்க இத்தாலி மக்களின் சூப்பர் ஐடியா! மனிதநேயம் காக்கும் உணவுக்கூடை!!

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது. அந்நாட்டு மக்களின் உணவுக் கூடைகள் முயற்சி இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement
விசித்திரம் Edited by

உணவுக்கூடையில் இருந்து பொருட்களை எடுக்கும் நபர்.

Highlights

  • கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடு இத்தாலி
  • வீடுதோறும் உணவுக் கூடைகள் தொடங்கவிடப்பட்டுள்ளன.
  • விரும்பியவர்கள் கூடைக்குள் உணவு பொருட்களை வைத்துவிட்டு செல்லலாம்

இத்தாலியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், வசதியில்லாதவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உணவில்லாமல் தவிப்போருக்காக புதிய முயற்சியை இத்தாலி மக்கள் கையில் எடுத்துள்ளனர். மனித நேயத்தை போற்றும் வகையில் நேப்பிள்ஸ் நகரில் வீடுதோறும் உணவுக் கூடைகள் தொங்க விடப்பட்டுள்ளன.

அந்த கூடைக்குள் இத்தாலியின் பாரம்பரிய உணவான பாஸ்தாவுடன் தக்காளி, எலுமிச்சை போன்ற காய்கறிகளும் கூடையில் இடம்பெறுகின்றன. பசியால் தவித்துக் கொண்டிருப்போர், இந்த கூடையை பயன்படுத்தி பசியாறிச் செல்கின்றனர்.

இத்தாலி மக்களின் இந்த முயற்சி இணையத்தில் பெரும் வரவற்பை பெற்றுள்ளது.

உதவும் விருப்பம் கொண்டவர்கள் இந்த உணவுக் கூடைக்குள் உணவுப் பொருட்களை போட்டுச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருவோரும் போவோரும் தம்மால் முடிந்த அளவு உணவுப் பொருட்களை கூடையினுள் வைத்துவிட்டு செல்கின்றனர்.

Advertisement

இந்த உணவுக்கூடை முயற்சியை, ‘பேனரா சோலிடேல்' என்று இத்தாலி மக்கள் அழைக்கின்றனர். மனிதநேயம் காக்கும் இதனை ஏஞ்செலோ பிகோன் என்பவர்தான் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த முயற்சி குறித்து பிகோன் அளித்த பேட்டியில், ‘எனக்கு திடீரென்றுதான் இந்த யோசனை வந்தது. எனது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படித்தான் உணவுப் பொருட்களை வழங்கினேன். அப்படியே இந்த யோசனை அனைத்து மக்களுக்கும் பயன்படுவதுபோல் ஆகி விட்டது.

Advertisement

கொரோனாவால் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வீட்டிற்குள் இருந்து கொண்டு நம்மை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தக் கூடாது. மற்றவர்கள் நலனையும் எண்ணிப் பார்க்க வேண்டும்' என்றார்.

உலகளவில் கொரோனா பாதிப்பால் அதிக உயிர்களை இழந்த நாடாக இத்தாலி உள்ளது. இங்கு 13,915 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 61 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பிலிருந்து மீளவில்லை.

Advertisement