This Article is From Nov 29, 2018

‘இது மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்கான நேரம்!’- தமிழ்நாடு வெதர்மேன் அட்வைஸ்

வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான், மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘இது மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்கான நேரம்!’- தமிழ்நாடு வெதர்மேன் அட்வைஸ்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன், ‘மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த கால தாமதம் ஆகிவிடவில்லை. நமக்கு டிசம்பரில் இன்னும் மழை பெய்யும் என்றாலும், சென்னையின் தண்ணீர் பிரச்னையை அந்த மழை தீர்த்துவிடாது.

சென்னையைத் தவிர்த்து மற்ற தமிழக மாவட்டங்களில், இந்த ஆண்டு நீர் இருப்பு நன்றாகவே இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் நீர் நிலைகள் கூட கடந்த வாரம் பெய்த மழையால் நிரம்பவிட்டன. ஆனால், அது போதாது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் இருக்கும் நீர் நிலைகளில், இந்தப் பருவமழையின் மூலம் 50 சதவிகிதம் நீர் சேமிக்கப்பட்டால், அது மிகப் பெரிய விஷயமே. எனவே, உங்கள் இல்லங்களில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை விரைந்து அமல்படுத்துங்கள்' என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.

.