This Article is From Jul 25, 2018

தனது ஃபேஷன் பிராண்டை இழுத்து மூடுகிறார் இவாங்கா டிரம்ப்!

2016-ல் நல்ல முன்னேற்றத்தைக் கண்ட இந்நிறுவனம் இவாங்காவின் தந்தை டொனல்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது

தனது ஃபேஷன் பிராண்டை இழுத்து மூடுகிறார் இவாங்கா டிரம்ப்!
New York:

2016-ல் விற்பனையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்ட இந்நிறுவனம் இவாங்காவின் தந்தை டொனல்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. 

தனது தந்தையை எதிர்ப்பவர்களின் அதிகமானதால், ஆடை, காலணி முதலியவற்றை விற்றுவந்த தனது பெயரிலான நிறுவனத்தை மூடப்போவதாக இவாங்கா செவ்வாயன்று அறிவித்துள்ளார். 
இவாங்காவின் தந்தை டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற நாள் முதல், பலத்த எதிர்ப்பை இந்நிறுவனம் சந்தித்து வருகிறது. பல விற்பனை நிறுவனங்கள் இவாங்காவின் பிராண்ட் பொருட்களை விற்பதிலிருந்து பின் வாங்கிவிட்டனர். 

36 வயதான இவாங்கா தற்போது தனது தந்தையின் ஆலோசகராக உள்ளார். அதிகாரமிக்க இப்பதவியில் இருந்துகொண்டே வணிகத்தில் ஈடுபடுவது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். 

இது குறித்துஇவாங்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாங்கள் இதைத் தொடங்கியபோது இவ்வளவு பெரிய வெற்றியை அடைவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பணியின் காரணமாக இன்னும் 17 மாதங்கள் வாஷிங்டனில் நான் இருக்க நேரிடும். அதன் பின்னர் மீண்டும் எப்போது நான் தொழில் தொடங்குவேன் என்று உறுதியாகக் கூறமுடியாது. எது எப்படியானாலும் என் எதிர்காலம் வாஷிங்டனில் இப்போது நான் ஆற்றிவரும் பணி சார்ந்ததாகவே இருக்கும். ஆகவே எனது பெயரிலான ஃபேஷன் பிராண்டை மூடுவதே இவ்வியாபாரத்தில் என்னோடு இருந்த தொழில் கூட்டாளிகளுக்கும் நல்லதாக இருக்கும்” என்றார். 

கடந்த ஆண்டு நார்ட்ஸ்ட்ரோம், நீமன் மார்க்கஸ் எனும் இரு விற்பனையகங்களும் இவாங்கா பிராண்ட் பொருட்களை விற்கமுடியாது என்று கை கழுவின. பல்வேறு செயற்பாட்டாளர்களும் டிரம்ப் மகளின் நிறுவனத்தின் பொருட்களை விற்கும் கடைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க அழைப்பு விடுத்ததே இதற்குக் காரணம். 

சாக்ஸ் ஃபிப்த் அவென்யூ மற்றும் லார்ட் & டெய்லர் விற்பனையகங்களை அமெரிக்காவில் நடத்திவரும் கனட நிறுவனமான ஹுட்சன்ஸ் பே நிறுவனமும் இம்மாதத் தொடக்கத்தில் இருந்து இவாங்காவின் பிராண்டை ஓரங்கட்டியது குறிப்பிடத்தக்கது. 

அதிபரின் மகளுக்கு தனது நிறுவனத்தை மூடுவது என்பது எத்தனைக் கடினமான முடிவாக இருந்திருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அபிகேல் தெரிவித்தார். 

.