This Article is From Nov 13, 2018

அதி நவீன போர் விமானத்தை காட்சிப்படுத்திய சீன ராணுவம்

ஜே-20 அதி நவீன ஜெட் ரக போர் விமானத்தை சீன ராணுவம் முதன் முறையாக காட்சிப் படுத்தியுள்ளது.

அதி நவீன போர் விமானத்தை காட்சிப்படுத்திய சீன ராணுவம்

சீறிச் செல்லும் ஜே-20 ஜெட் ரக போர் விமானங்கள்

Shanghai:

ராணுவ வலிமையை அதிகப்படுத்திக் கொள்வதில் சீன ராணுவம் முனைப்பு காட்டி வருகிறது. அந்நாட்டிடம் அதி நவீன போர்க்கருவிகள் பல இருக்கலாம் என மதிப்பிடப்பட்டு வரும் நிலையில், அவற்றை வெளிப்படுத்தாமல் சீனா ரகசியம் காத்து வந்தது.

இந்த நிலையில் அதி நவீன ஜே-20 என்ற ஜெட் ரக போர் விமானத்தை முதன் முறையாக சீனா காட்சிப்படுத்தியுள்ளது. 4 ஏவுகணைகளைக் கொண்ட ஜெட் போர் விமானங்கள் ஷாங்காயில் நடந்த விமானக் கண்காட்சியில் சீறிச் சென்றன.

சீன ராணுவத்தின் 69-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஜே-20 ரக போர் விமானத்தை சீனா காட்சிப் படுத்தியுள்ளது. இந்த போர் விமானம் அமெரிக்காவின் அதிநவீன எஃப்-22, எஃப்-35-யைக் காட்டிலும் அதிக திறன் கொண்டது.

வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் இந்த ஜே-20 ரக போர் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.