This Article is From Jun 10, 2020

ஜெ.அன்பழகன் மறைவு: முதல்வர் இரங்கல்

தமிழக முதல்வர் பழனிசாமி ஜெ.அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஜெ.அன்பழகன் மறைவு: முதல்வர் இரங்கல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன்(62) கடந்த 8 நாட்களாக கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மூன்று முறை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தென் சென்னை மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் பழனிசாமி ஜெ.அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

அதே போல தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

.