This Article is From May 15, 2019

வாழ்க்கை நல்லா இருக்க கோடீஸ்வரர் ஜேக் மா சொல்லும் '669' ஃபார்முலா! சமூக வலைதளங்களில் சர்ச்சை!!

அலுவலங்களில் வேலை பார்ப்பது குறித்து ஜேக் மா முன்னதாக ஒரு ஃபார்முலாவை கூறினார். அதுவும் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.

வாழ்க்கை நல்லா இருக்க கோடீஸ்வரர் ஜேக் மா சொல்லும் '669' ஃபார்முலா! சமூக வலைதளங்களில் சர்ச்சை!!

சீனாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஜேக் மா. இவர் ஆன்லைன் சந்தை நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர்.

Beijing:

வாழ்க்கை நல்லா இருக்க சீன கோடீஸ்வரர் ஜேக் மா 669 என்ற தத்துவத்தை கூறியுள்ளார். இது அவரது முந்தைய 996 ஃபார்முலாவைப் போன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஆன்லைன் சந்தை நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் ஜேக் மா. இவருக்கு அரசியல்வாதி, பிஸ்னஸ்மேன், முதலீட்டாளர், தத்துவஞானி என பல முகங்கள் உண்டு. புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள், பெரும்பாலும் இவரைத்தான் ரோல் மாடலாக எடுத்துக் கொள்கின்றனர். 

ஜேக் மாவின் சொத்து இந்திய மதிப்பில் ரூ. 2.75 லட்சம் கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறும்புக்காரரான ஜேக், அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவார். 

சமீபத்தில் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்காக 996 என்ற டிப்ஸை கொடுத்தார். அதாவது காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிவரை வாரத்தில் 6 நாட்கள் பணி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த 996 ஃபார்முலா. 

இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஜேக் மா வேண்டுமானால் 24 மணிநேரமும் வேலை பார்க்கட்டும்; நம்மால் முடியாது என்று அவர்கள் கிண்டல் செய்தனர். இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ள 669 ஃபார்முலாவை ஜேக் வெளியிட்டிருக்கிறார். 

இது வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கான ஃபார்முலாவாம். அதாவது வாரத்தில் 6 நாட்கள் 6 முறை செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜேக் கூறியுள்ளார். சமீபத்தில் அலிபாபா ஊழியர்கள் சிலர் ஒரே மேடையில் திருமணம் முடித்துக் கொண்டனர். அங்குதான் இந்த 669 வெடியை கொளுத்திப்போட்டுள்ளார் ஜேக். 

''காலை 9 மணிக்கு வேலைக்கு வந்து இரவு 9 மணி வரை வேலையை 6 நாட்கள் பார்த்து 6 முறை செக்ஸ் வைத்துக் கொள்ளும் சக்தி உலகத்தில் யாருக்கு இருக்கிறது?'' என்று நெட்டிசன்கள் கமென்ட் அடித்து வருகின்றனர்.

.