This Article is From Sep 11, 2018

அலிபாபா நிறுவனர் ஜாக் மா ஓய்வு குறித்து அறிவிப்பு!

நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஒரு வருடத்தில் விலகுவார் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது

அலிபாபா நிறுவனர் ஜாக் மா ஓய்வு குறித்து அறிவிப்பு!

நண்பர்களுடன் சேர்ந்து 1999ஆம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தை ஜாக் மா தொடங்கினார்

ஹைலைட்ஸ்

  • அலிபாபா நிறுவனத்தில் இருந்து ஜாக் மா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
  • பல முக்கிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
  • “இன்று கடினமானது. நாளை மிக கடினமானது. ஆனால் நாளை மறுநாள் அழகானது” - ஜாக்

சீனாவின் பெரும் பணக்காரரான ஜாக் மா, உலகப் புகழ்பெற்ற அலிபாபா நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஒரு வருடத்தில் விலகுவார் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆங்கில பேராசிரியராக இருந்த ஜாக் மா, அலிபாப நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து 1999-ஆம்  ஆண்டு தொடங்கினார். பின் அது உலகின் மிகப்பெரிய இணையவழி வணிக நிறுவனமாக உருவெடுத்தது. பல முக்கிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக் மாவின் சில முக்கிய கூற்றுகள் இங்கே பகிரப்பட்டுள்ளது.

தலைமை தாங்குதல்
“வித்தியாசமான கண்ணோட்டங்களைக் கொண்ட குழு இருந்தால், வெற்றி பெறுவது எளிமையாகும்”

பெண்கள்
“சகிப்புத்தன்மை குறித்து பெண்கள் அறிவர். ஆண்களை விட பெண்கள் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்”

வெற்றி - தோல்வி
“போட்டியில் இருந்து விலகுவதே மிகப் பெரிய தோல்வி”

பொறுமை
“இன்று கடினமானது. நாளை மிக கடினமானது. ஆனால் நாளை மறுநாள் அழகானது”

வணிகம்
“போட்டியாளர்களை பற்றி நினைப்பதை தவிர்த்து வாடிக்கையாளர்களை பற்றி நினைக்க வேண்டும்”



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.