This Article is From Dec 11, 2018

சீனாவின் நம்பர் ஒன் பணக்காரர் : ஜேக் மாவை பின்னுக்கு தள்ளிய ரியல் எஸ்டேட் அதிபர்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் 20-வது இடத்தில் ஜேக் மா உள்ளார். 19-வது இடத்தில் சு ஜியான் இடம்பெற்றிருக்கிறார்.

Advertisement
உலகம்

ஜேக் மாவை 2-ம் இடத்திற்கு தள்ளியிருப்பவர் எவர்கிராண்ட் குரூப்பின் தலைவர் சு ஜியான்.

Beijing:

சீனாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பட்டத்தை ஜேக் மா இழந்திருக்கிறார். எவர்கிராண்ட் குரூப்பின் தலைவர் சு ஜியான் ஜேக் மாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.

அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவன தலைவர் ஜேக் மா, உலகம் முழுவதும் அறியப்பட்டவர். தொழில் தொடங்கும்  பலருக்கு ஜேக் மாதான் ரோல் மாடலாக இருந்து வருகிறார். பணம் சம்பாதிப்பதில் ஜேக் மா பின்பற்றும் யுக்திகள், அவரின் பர்சனாலிட்டி உள்ளிட்டவை நாடுகளைக் கடந்து ரசிகர்களை உருவாக்கியது. 

சீனாவின் நம்பர் ஒன் பணக்காரராக  ஜேக் மா இருந்து வந்தார்.  இந்த நிலையில் அவரை எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட் குரூப்பின் தலைவர் சு ஜியான் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருப்பதாக போர்ப்ஸ் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. 

ஜேக் மாவுக்கு 36.7 பில்லியன் டாலரும், சு ஜியானுக்கு 42.5 பில்லியன் டாலரும் சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் பெண் ஒருவரும் இடம்பிடித்துள்ளார். 

Advertisement

கார்டன் ஹோல்டிங்ஸ் நிறுவன தலைவராக  இருந்த யாங் ஹுவானுக்கு சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் 6-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 18.2 பில்லியன் டாலர் சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement