This Article is From Jan 29, 2019

‘ஸ்விகி-யில் பட்டதாரிகள் வேலை பார்ப்பது தெரியுமா?’-ஆசிரியர்களை வெளுத்த நீதிமன்றம்

இன்று மதியம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போதும் ஜாக்டோ-ஜியோ சங்கத்தின் வாதம் முன் வைக்கப்படும். 

‘ஸ்விகி-யில் பட்டதாரிகள் வேலை பார்ப்பது தெரியுமா?’-ஆசிரியர்களை வெளுத்த நீதிமன்றம்

கடந்த 22-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து இன்று 8-வது நாளாக நடந்து வருகிறது.

ஹைலைட்ஸ்

  • 22-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது
  • இன்று ஒரு பகுதி ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர்
  • தொடர்ந்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 22-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து இன்று 8-வது நாளாக நடந்து வருகிறது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நேற்றைக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றோடு அவகாசம் முடிந்த நிலையில், இன்று காலை 9 மணி வரை அவகாசம் நீடித்து செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார். அப்படி இருந்தும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களின் ஒரு பகுதியினர்தான் இன்று பணிக்குத் திரும்பியுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிமன்றம் ஆசிரியர்கள் தரப்பை சரமாரி கேள்விகளால் துளைத்தது. 

நீதிமன்றம், ‘போராட்டம் நடத்துவதற்கு தேர்வு காலம்தான் சரியான நேரமா. மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறையில்லையா.  சாலையில் இறங்கி போராடுவது ஆசிரியர்களுக்கு அழகல்ல.

ஸ்விகி உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனத்தில் பட்டதாரிகள் பலர் பணியாற்றி வருகின்றனர். உயர் நீதிமன்றத்தில் துப்புரவுப் பணிக்கு எத்தனை பட்டதாரிகள், பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கிறார்கள் தெரியுமா?

அரசியல்வாதிகளை வசைபாடும் ஆசிரியர்கள் தங்கள் செயல்பாடுகளை உணர்ந்து பார்க்க வேண்டும். வேலை நிறுத்தம் செய்யும் சங்க நிர்வாகிகள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்களை தூற்றுவது சரியா. உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று ஆசிரியர்களை வலியுறுத்துகிறோம்' என்று கூறியுள்ளது.

இன்று மதியம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போதும் ஜாக்டோ-ஜியோ சங்கத்தின் வாதம் முன் வைக்கப்படும். 


 

.