This Article is From Jan 31, 2019

போராட்டம் வாபஸை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்

கடந்த 22-ம் தேதியிலிருந்து நடைபெற்று வந்த போராட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

போராட்டம் வாபஸை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்

பணிக்கு திரும்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • 22-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடந்து வந்தது
  • நேற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
  • இன்று அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வந்த போராட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று நேற்று வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 22-ம்தேதியில் இருந்து இந்த போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஈடுபட்ட சுமார்  1500-க்கும் அதிகமான ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. 

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற அரசு தவறினால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பு எச்சரித்துள்ளது. 
 

மேலும் படிக்க - "ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்!"



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.