ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹைலைட்ஸ்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ போராட்டம்
- தலைமை செயலக ஊழியர்கள் ஒருநாள் ஸ்ட்ரைக் அறிவித்திருந்தனர்
- கடும் நடவடிக்கை எடுக்கப்படும என தலைமை செயலர் எச்சரித்திருந்தார்
தலைமை செயலக பணியாளர்கள் 90% -க்கும் அதிகமானோர் பணிக்கு வந்துள்ளனர். ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக இன்று ஒருநாள் மட்டும் வேலை நிறுத்த போராட்டத்தை தலைமை செயலக ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக இன்று ஒருநாள் மட்டும் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர்.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், போராட்டத்தில் தலைமை செயலக ஊழியர்கள் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்திருந்தார்.
இந்த நிலையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பியுள்ளனர். சுமார் 8 சதவீத தலைமை செயலக ஊழியர்கள் மட்டுமே தற்போது ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.