This Article is From Jan 28, 2019

ஜாக்டோ - ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில் இன்று மாலைக்குள் அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

Highlights

  • காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்
  • இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை
  • உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆசிரியர்கள் போராட்டம் நடந்து வருகிறது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. 

முன்னதாக இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டது. இதனை பொருட்படுத்தாத ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைக்குள் பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், அதனை மீறினால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதென அறிவிக்கப்படும் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 

Advertisement

துறை ரீதியாக அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் மீண்டும் அதே பணியிடத்தில் நியமிப்பதில் சிக்கல் இருக்கும் என்பதால், தமிழக அரசின் இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக கருதப்படுகிறது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement