This Article is From Jan 22, 2019

“தயவு செய்து போராடாதீங்க..!”- அரசு ஆசிரியர்களுக்கு அமைச்சர் பகிரங்க கோரிக்கை

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.

“தயவு செய்து போராடாதீங்க..!”- அரசு ஆசிரியர்களுக்கு அமைச்சர் பகிரங்க கோரிக்கை

பழைய ஊதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன் வைத்து தமிழக அரசின் கீழ் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், “போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ள ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்னும் ஒரு வாரத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்த நேரத்தில் நாட்டிற்குப் பெரும் பங்காற்றிட வேண்டிய ஆசிரயப் பெருமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சரியாக இருக்காது. குருவாக நினைக்கும் மாணவர்களுக்கு தொண்டாற்றிட வேண்டும் என்பதை இந்த அரசின் சார்பில் கோரிக்கையாக வைக்கிறேன். இதை மனதில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று நம்புகிறேன்” என்று சொன்னார்.

தொடர்ந்து, “ஒரு வேலை அவர்கள் பணிக்குத் திரும்பவே இல்லை என்கின்றபோது, அதற்கு மாற்று ஏற்பாடுகளை அரசு செய்துள்ளதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர், “இன்றுதான் போராட்டம் தொடங்கியுள்ளது. அது போகப் போக எப்படி இருக்கும் என்பதைப் பார்த்துத்தான் ஒரு நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரோடு இது குறித்து கலந்து பேசுவோம்” என்று பதிலளித்தார்.

.