Read in English
This Article is From Jan 15, 2019

பெண்கள் குறித்து சர்ச்சைக் கருத்து சொன்ன பேராசிரியர்; வலுக்கும் எதிர்ப்பு!

ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் கனக் சர்கர், பெண்களின் 'கன்னித் தன்மையை' பிஸ்கட் பாக்கெட் உடனும் திறக்கபடாத தண்ணீர் பாட்டில் உடனும் ஒப்பிட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Translated By (with inputs from IANS)

பெண்களை குறித்து சர்ச்சையாக பதிவு செய்த கனக் சர்கர்

Kolkata:

மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர், பெண்களின் 'கன்னித் தன்மையை' குறித்து சர்ச்சையான கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் கனக் சர்கர், பெண்களின் 'கன்னித் தன்மையை' பிஸ்கட் பாக்கெட் உடனும் திறக்கபடாத தண்ணீர் பாட்டில் உடனும் ஒப்பிட்டுள்ளார்.

'திறக்கப்படாத தண்ணீர் பாட்டிலையும் திறக்கப்படாத பிஸ்கட் பாக்கெட்டையும் தான் இளைஞர்கள் விரும்புவர். அதுபோல், கன்னித் தன்மையுடைய பெண் பல ஆண்களுக்கு தேவதை மாதிரி' என பதிவிட்டிருந்தார். இவர் பதிவிற்கு எதிர்ப்புகள் கிளம்ப, அந்த பதிவை அவர் நீக்கியுள்ளார்.

 

நீக்கப்பட்ட பேஸ்புக் பதிவு

'இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்ப, நான் என் கருத்தைத்தான் பதிவிட்டிருக்கிறேன். தனி நபர் யாரையும் நான் குறிப்பிடவில்லை. என் கருத்தை நான் பதிவு செய்ய எனக்கு உரிமை உண்டு. சமூதாய ஆராய்ச்சி செய்துதான் நான் இதை பதிவிட்டிருக்கிறேன்' எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பலர் வற்புறுத்தி வருகின்றனர். கல்லூரி ஆசிரியர் ஒருவர் இவ்வாறு பெண்கள் குறித்து சர்ச்சையான, கீழ்த்தரமான கருத்தை பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Advertisement
Advertisement