Read in English
This Article is From Nov 26, 2019

லஞ்சத்தை ஒழிக்க ஆந்திர முதல்வர் அதிரடி! புகார் உதவி எண் அமைக்கப்பட்டது!!

புகார்கள் 15 முதல் 30 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும் என்று ஜெகன் மோகன் கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்பு உதவி எண் தொடர்பான போஸ்டர்கள், ஆந்திர முதல்வரின் முகாம் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

Advertisement
இந்தியா Edited by

புகார்களை தனிப்பட்ட முறையில் பார்வையிடுவதாக கூறியுள்ளார் ஜெகன்.

Amaravati:

ஆந்திர அரசின் துறைகளில் யாரேனும் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிப்பதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார்.

லஞ்சம் தருமாறு மக்கள் வற்புறுத்தப்பட்டால் 14400 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் 15 முதல் 30 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும் என்று ஜெகன் மோகன் கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்பு உதவி எண் தொடர்பான போஸ்டர்கள், ஆந்திர முதல்வரின் முகாம் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை குறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், ‘ஊழலுக்கு எதிராக இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் தொடர்பான புகார்களை நானே தனிப்பட்ட முறையில் கவனிக்க உள்ளேன். இந்த உதவி எண் மையமானது, லஞ்சத்தை, ஊழலை அரசின் அனைத்து மட்டங்களிலும் ஒழிப்பதற்கான ஒரு நடவடிக்கை' என்றார்.

Advertisement
Advertisement