This Article is From Feb 12, 2020

"நாங்க சிஏஏ-வை எதிர்க்கிறோம்!" - பல்டியடித்த ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி!!

சட்டபூர்வமாக வந்த மக்களின் குடியுரிமையை இத்தனை ஆண்டுகள் கழித்து மறுப்பது என்பது முறையற்ற செயல்

அவர்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்

ஹைலைட்ஸ்

  • அவர்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்
  • தங்கள் அரசு அவர்களின் நலனுக்காக உழைக்கும் என்றும் அவர் கூறினார்.
  • குடியுரிமையை இத்தனை ஆண்டுகள் கழித்து மறுப்பது என்பது முறையற்ற செயல்
Amaravati:

YSR காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆந்திர மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு, தாங்கள் சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளது. ஆந்திரா மாநிலத்தின் துணை முதலவர் அம்ஜத் பாஷா கூறுகையில், தங்கள் மாநில அரசு சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி எனப்படும் தேசிய மக்கள் பதிவேடு ஆகிய திட்டங்களுக்கு ஆதரவு அளிக்காது என்று கூறியுள்ளார். மேலும் YSR காங்கிரஸ் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், சிறுபான்மை மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.        

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர், இந்த சட்டங்களால் சிறுபான்மையின மக்கள் அனைவரும் மிகுந்த கலக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், அவர்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு  வருவதாகவும் அவர் கூறினார். மேலும், நாங்கள் ஏற்கனவே பல்வேறு சிறுபான்மை அமைப்புகளுடன் கலந்தாலோசித்து அவர்களின் கருத்தை கேட்டறிந்ததாகவும், தங்கள் அரசு அவர்களின் நலனுக்காக உழைக்கும் என்றும் அவர் கூறினார். 
  
பிற நாடுகளில் நடந்த பிரிவினையின்போது, அதை பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள், இந்திய நாட்டிற்கு வந்து இங்கு குடியுரிமை பெற்றுள்ளனர். இது இந்திய அரசியலமைப்பின்படி சரி. அப்படி சட்டபூர்வமாக வந்த மக்களின் குடியுரிமையை இத்தனை ஆண்டுகள் கழித்து மறுப்பது என்பது முறையற்ற செயல் என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சிஏஏ தொடர்பான வாக்கெடுப்பின் போது, அதற்கு ஆதரவாக செயல்பட்டது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது நிலைப்பாட்டை அக்கட்சி மாற்றியுள்ளது.
 

.