Read in English
This Article is From Jun 07, 2019

ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்: ஜெகன் ரெட்டியின் அடுத்த அதிரடி!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசில், இரண்டு துணை முதல்வர்கள் பதவியில் இருந்தனர்.

Advertisement
Andhra Pradesh Edited by

இன்று காலை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.

Amaravati:

ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, 5 துணை முதல்வர்களை நியமனம் செய்துள்ளார். 

இன்று காலை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் 25 அமைச்சர்கள் இருப்பார்கள் என்றும் 5 துணை முதல்வர்கள் செயல்படுவார்கள் என்றும் கூறியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. 

வரும் சனிக்கிழமை இவர்களுக்கான பதவிப் பிரமாணம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 

பட்டியல் இனத்தவர்களில் இருந்து ஒருவர், பழங்குடியினத்தவர்களைச் சேர்ந்த ஒருவர், பிற்படுத்தப்பட்டவர்களில் இருந்து ஒருவர், சிறுபான்மையினர்களில் இருந்து ஒருவர் மற்றும் காபு சமூகத்தில் இருந்து ஒருவர் என்று துணை முதல்வர்கள் பதவி ஏற்க உள்ளனர். 

Advertisement

அதேபோல மாநில அமைச்சரவையில் அதிகமானோர் நலிவடைந்த சமூகத்தில் இருப்பவர்கள்தான் இருப்பர் என்று ஜெகன் ரெட்டி கூறியுள்ளார். 

அமைச்சரவை எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்து சிறிது காலத்தில் ரிவ்யூ செய்யப்பட்டு, மீண்டும் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசில், இரண்டு துணை முதல்வர்கள் பதவியில் இருந்தனர். அதில் ஒருவர் காபு சமூகத்தையும் மற்றவர் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தையும் சேர்ந்தவராக இருந்தனர். 


 

Advertisement