This Article is From Mar 15, 2019

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்தா ரெட்டி படுகொலை

புலிவேந்துலாவில் படுகொலை நடந்திருக்கிறது. அங்கு ஜெகன் மோகன் ரெட்டியும், அவரது தாயார் விஜயம்மாவும் விரைந்துள்ளனர்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்தா ரெட்டி படுகொலை

விவேகானந்தா ரெட்டியின் உடலின் சில இடங்களில் காயங்கள் காணப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

Hyderabad:

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தம்பியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவுமான விவேகானந்தா ரெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் முன்னாள் விவசாயத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவில் இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்கிறது. இதுகுறித்து விவேகானந்தா ரெட்டியின் உறவினர் அவினாஷ் ரெட்டி கூறுகையில், ''விவேகானந்தா ரெட்டியின் தலையின் முன்பக்கத்திலும், பின் பக்கத்திலும் காயங்கள் இருந்தன'' என்று தெரிவித்தார். 

வீட்டின் படுக்கை அறை மற்றும் குளியலறையில் ரத்தம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், ஐதராபாத்தில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டியும், அவரது தாயார் விஜயம்மாவும் 430 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புலிவேந்துலாவுக்கு விரைந்தனர். 

உயிரிழந்த விவேகானந்தா ரெட்டிக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். 68 வயதான விவேகானந்தா ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்காக மக்களவை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். 

2 நாட்களுக்கு முன்பாக ஐதராபாத் வந்திருந்த விவேகானந்தா ரெட்டி, ஜெகன் மோகனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் படுகொலை சம்பவம் நடந்திருக்கிறது. 

.