This Article is From Jan 20, 2020

பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு!

ஜே.பி.நட்டா இன்று காலை 10.30 மணி அளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து, அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

பாஜக தலைவராக இன்றே ஜே.பி.நட்டா அறிவிக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

பாஜகவின் தற்போதைய செயல்தலைவராக இருந்து வரும் ஜே.பி.நட்டா இன்று அமித் ஷாவிடம் இருந்து முறையாக அக்கட்சியின் தலைவர் பொறுப்பை இன்று பெற்றுக்கொள்ள உள்ளார்.  

ஜே.பி.நட்டா இன்று காலை 10.30 மணி அளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து, அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 

நட்டாவின் பெயரை கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி உள்ளிட்டோர் முன்மொழிகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, இந்த முன்மொழிவை பாஜக தேசிய கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள் பின்பற்றுவார்கள் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக பாஜக மத்திய தேர்தல் குழுத் தலைவர் ராதா மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், முழு அட்டவணையையும் வெளிவந்தது. 

அதில், "பாஜக சேர்க்கை மற்றும் விரிவாக்க உந்துதலின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பின்னர், 75 சதவீத சாவடி குழுக்கள், 50 சதவீத மண்டலக் குழுக்கள் மற்றும் கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 21 மாநிலங்களில் பாஜகவின் அரசியலமைப்பின் படி தேர்தலை நடத்திய பின்னர், கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 

பாஜக தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.வேட்புமனுக்கள் மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை ஆய்வு செய்யப்படும். வேட்புமனுவை மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை திரும்பப் பெறலாம்.

இதில், ஜே.பி.நட்டா மட்டுமே வேட்பாளராக இருக்கக்கூடும் என்பதால், செவ்வாயன்று நடக்க வேண்டிய வாக்களிப்பை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. இதனால், நட்டாவை கட்சித் தலைவராக பாஜக இன்றே அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜே.பி.நட்டா 1993 - 2012 வரை ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்தவர். பாஜக வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் பாடுபட்ட அவர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 

.