This Article is From Jun 02, 2019

திரிணாமூல் காங்கிரஸ் கூட்டத்தின் போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’கோஷம்

மம்தா பானர்ஜி அரசின் மூன்று அமைச்சர்கள் நடத்திய கட்சி கூட்டத்தில் சுமார் 200 அடி தூரம் தள்ளி ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பப்பட்டது.

பாஜக ஆதாரவாளர்கள் 15 நிமிடங்கள் காஞ்சாப்பாரா ரயில் நிலையத்தில் ரயில்களை தடுத்தனர்.

ஹைலைட்ஸ்

  • ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்
  • திரிணாமூல் அமைச்சர்களை ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட்டு கேலி செய்தனர்
  • காவல்துறை கூட்டத்தினர் மீது தடியடி நடத்தியது.
Kolkata:

ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் திரிணாமுல் காங்கிரஸின் கட்சி கூட்டத்தில் மீண்டும் ஒலித்தது. பாராக்பூர் தொகுதியில் காஞ்சாப்பாரா பகுதியில் மம்தா பானர்ஜி அரசின் மூன்று அமைச்சர்கள் நடத்திய கட்சி கூட்டத்தில் சுமார் 200 அடி தூரம் தள்ளி ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பப்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

அமைச்சர்கள் ஜோதிப்ரியோ மல்லிக் மற்றும் தபோச் ராய் ஆகியோர் அந்த இடத்தை விட்டு அகன்றதும் பாஜக ஆதாரவாளர்கள் 15 நிமிடங்கள் காஞ்சாப்பாரா ரயில் நிலையத்தில் ரயில்களை தடுத்தனர்.

சுமார் 4 மணியள்வில் பாஜக தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த தர்ணாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்தனர்.

திரிணாமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷத்திற்கு எதிரிப்பு தெரிவித்தார். பாஜகவினர் அவர் எங்கு சென்றாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்பி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தபடியே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

.