This Article is From Jul 14, 2018

தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோள்

தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் ஒரு புதிய சோதனை செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர்.

தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோள்
Chennai:

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் ஒரு புதிய சோதனை செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர். இது உலகின் மிக சிறிய மற்றும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளாக இருக்கும். ஒருவரின் உள்ளங்கை அளவிற்குள் அடங்கிவிடும் இந்த செயற்கைக்கோள் வெறும் ரூ. 15,000 செலவில் தயாரிக்கப்பட்டு, ஒரு முட்டையின் எடையை விடவும் குறைவாக உள்ளது. இந்த செயற்கைக்கோள் முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் நான்கு மாணவர்களால் தயாரிக்கப்பட்டு ’ஜெய்ஹிந்த்-1எஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது வானிலை நிலவரங்கள் சம்பந்தமான தகவல்களை சேகரிக்கப் பயன்படுகிறது.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் தகவல் படி, ஒரு சிறிய நான்கு சென்டிமீட்டர் கியூப் போன்ற வடிவத்தில் உள்ள இந்த செயற்கைகோள், ஆகஸ்ட் மாதம் நாசா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. வெறும் 33.39 கிராம் எடையுள்ள ஜெய்ஹிந்த் செயற்கைக்கோள், அதனுடைய வெளிப்புறம் 3டி பிரிண்டிங் செய்யப்பட்டதால் இவ்வளவு எடைக் குறைவாக இருக்கிறது.

ஜெய்ஹிந்த் ஒரு பலூன் அல்லது ராக்கெட்டின் மூலம் ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. பலூன் வேண்டிய உயரத்தை அடைந்த பிறகு, செயற்கைக்கோள் அதிலிருந்து விலகுகிறது.

ஜெய்ஹிந்த், 20 வெவ்வேறு வானிலை கூறுகளை அளவிடும். ஒரு வினாடிக்கு நான்கு வானிலை கூறுகளை பதிவு செய்யும் திறனும் கொண்டது. இதில் கிடைக்கக்கூடிய தகவல்கள் எல்லாம் ஒரு இன்பில்ட் எஸ்டி கார்டில் பதிவு செய்து வைக்கப்படுகிறது.

இந்த செயற்கைக்கோளின் வெளிப்புறம் உருவாக்க 3டி பிரிண்டங் மூலம் பயன்படுத்தப்பட்ட, 'பாலி லேக்டிக் ஆசிட் நயிலான்' பொருளின் ஆயுளை சோதனை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

செயற்கைக்கோளில் உள்ள சென்சார், நீராவி அழுத்தம், அசலான நீராவி அழுத்தம், வெப்பநிலை மாறுபாடு உள்ளிட்டவற்றை அளவிட தொடங்கி, வானிலை நிலவரங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது.

ஜெய்ஹிந்த் செயற்கைக்கோளின் இன்பில்ட் எஸ்டி கார்டில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள், செயற்கைக்கோள் தன்னுடைய முதல் பயணத்தில் இருந்து மீட்கப்பட்ட உடன் பெறப்படும்.

செயற்கைக்கோள் 40 அடி உயரத்திற்கு சோதனை செய்யப்பட்டு கடந்த வாரம் நாசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜெய்ஹிந்த் செயற்கைக்கோள், சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள ஹிந்துஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களான கே.ஜே. ஹரிகிருஷ்னன், பி அமர்நாத், ஜி சுதி மற்றும் டி கிரி பிரசாத் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.
 

.