This Article is From Feb 15, 2020

14 ஆண்டுகள் சிறைக்குப் பின்னர் மீண்டும் தேர்வெழுதி எம்.பி.பி.எஸ். டாக்டரான இளைஞர்!!

சுபாஷ் பாட்டீலை கடந்த 2002-ல் கொலை வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்தனர். அவர் அப்போது எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு 2006-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

14 ஆண்டுகள் சிறைக்குப் பின்னர் மீண்டும் தேர்வெழுதி எம்.பி.பி.எஸ். டாக்டரான இளைஞர்!!

நன்னடத்தைக்காக சுபாஷ் பாட்டீல் விடுவிக்கப்பட்டார்.

Kalaburagi, Karnataka:

14 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் வெளியே வந்து, மீண்டும் தேர்வெழுதி இளைஞர் ஒருவர் எம்.பி.பி.எஸ். டாக்டராகியுள்ளார்.

விடா முயற்சியும், ஆர்வமும், உழைப்பும் இருந்தால் முடியாதது ஒன்றும் இல்லை என்பார்கள். அதற்கு நடைமுறையில் எத்தனையோபேர் உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டம் அப்சல்புராவை சேர்ந்த சுபாஷ் பாட்டீல் என்ற இளைஞரும் ஒருவர்.

சுபாஷ் கடந்த 1997-ல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அப்போது கொலை வழக்கு ஒன்றில் தொடர்புபடுத்தப்பட்ட அவர் கடந்த 2002-ல் சிறைக்குச் சென்றார். அந்த சமயத்தின்போது சுபாஷ் 3 ஆண்டுகள் படிப்பை மட்டுமே முடித்திருந்தார். 

சிறையில் அவருக்கு மருத்துவ தொழில் சார்ந்த வேலையே அளிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு கொலை வழக்கில் சுபாஷுக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் விதித்தது. 

மிகச் சரியாக 14 ஆண்டுகள் அவர் சிறையில் கழித்த நிலையில், நன்னடத்தை கருதி 2016-ல் விடுவிக்கப்பட்டார். இதன்பின்னர் தொடர்ந்து படித்து, தேர்வுகளை எழுதிய சுபாஷ் 2019-ல் எம்.பி.பி.எஸ். மருத்துவ பட்டப்படிப்பை முடித்தார்.

சிறு வயது முதலே அவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அந்த லட்சித்தை சிறைக் கம்பிகளால் தகர்க்க முடியவில்லை. தற்போது தனது இலக்கை அடைந்து விட்டதாக சுபாஷ் பாட்டீல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

.