இந்த என்கவுண்டர் தென் காஷ்மீரான புல்வாமாவில் நடந்துள்ளது.
New Delhi: புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய காரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், 3 பேர் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்.14ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஃஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு வாகனங்கள் மற்றும் வெடிகுண்டுகளை ஏற்பாடு செய்து முக்கிய புல்லியாக செயல்பட்டு வந்த முதாசீர் அகமது கான் என கருதப்படுகிறது.
இதுகுறித்து பிடிஐ, செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் கூறியதாவது, புல்வாமா தாக்குதலில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட பயங்கரவாதி அதில் அகமதுடன், முதாசீர் கான் தொடர்பில் இருந்ததை தேசிய புலணாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
புல்வாமா மாவட்டம், டிரால் பகுதியை சேர்ந்தவன் 23 வயதான அகமது கான். பட்டப்படிப்பு முடித்த அகமது கான் புல்வாமா தாக்குதலுக்கு தேவையான காரை விலைக்கு வாங்க உதவியதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவின் திரால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள் என்ற ரகசிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர், காஷ்மீர் போலீஸார் அந்த கிராமத்தை நேற்று அதிகாலை சுற்றி வளைத்தனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினர் கிராமத்தைச் சுற்றி வளைத்ததை அறிந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.