Read in English
This Article is From Aug 04, 2019

ஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழரை மீட்க நடவடிக்கை! மத்திய அரசு உறுதி!!

ஈரான் அதிகாரிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழர் ஒருவர் உள்பட 18 இந்திய கப்பல் பணியாளர்களை ஈரான் சிறை பிடித்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

ஸ்டெனா இம்பெரோ என்ற கப்பல் ஈரான் அதிகாரிகளால் கடந்த 19-ம்தேதி சிறைபிடிக்கப்பட்டது.

Chennai:

ஈரான் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த வாசுதேவன் என்பவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இதன்பேரில் நடவடிக்கை எடுப்பதாக வெளியுறவு அமைச்சகம் உறுதி அளித்தள்ளது.

ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டிஷ் கப்பலில் 18 இநதிய பணியாளர்கள் உள்பட மொத்தம் 22 பேர் இருந்தனர். அவர்களில் சென்னையை சேர்ந்த 27 வயதான ஆதித்யா வாசுதேவன் என்பவரும் ஒருவர்.

இந்த நிலையில் ஈரான் கடல் எல்லைக்குள் நுழைந்ததால் கடந்த 19-ம்தேதி ஸ்டெனா கப்பல் அதிகாரிகளால் சிறைப்பிடிக்கப்பட்டது. அதில் இருந்த 22 பணியாளர்களும் ஈரான் பிடியில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழரான ஆதித்யா வாசுதேவனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

Advertisement

இதற்கு மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், ‘ஸ்டெனா இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களையும் விரைவில் விடுவித்து தாயகம் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகின்றோம். இது தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றோம். தெஹ்ரானில் உள்ள நமது தூதரக அதிகாரிகள் மாலுமிகளைச் சந்தித்துள்ளனர். அவர்கள் நலமாக இருப்பதாகத் தெரிகிறது.' என்று பதில் அளித்துள்ளார்.

இதனால் இந்திய பணியாளர்கள் விரைவில் மீட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement