This Article is From Jun 04, 2019

குஜராத்திலிருந்து எம்.பி.யாகிறார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!!

பாஜக தரப்பில் இருந்து பீகாரின் லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானும், மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படவுள்ளார். குஜராத்தில் மொத்தம் உள்ள 26 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்திலிருந்து எம்.பி.யாகிறார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!!

சுஷ்மா சுவராஜுக்கு பதிலாக ஜெய் சங்கர் மத்திய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

New Delhi:

மத்திய வெளியுறவு அமைச்சராக முன்னாள் வெளியுறவு செயலராக இருந்த ஜெய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்திற்கு இன்னமும் தேர்வு செய்யப்படாத அவர், குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வெளியுறவு அமைச்சராக முந்தைய மோடி அரசில் இருந்த சுஷ்மா சுவராஜ், உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் பொறுப்பு வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து வெளியுறவு செயலராக இருந்த ஜெய்சங்கருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அமைச்சராக பொறுப்பு ஏற்கும் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் எம்.பி.யாகாத வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அங்குள்ள 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதேபோன்று, நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானும் பாஜக தரப்பில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சீனா மற்றும் அமெரிக்கா உடனான நட்புறவில் வெளியுறவு செயலராக இருந்த ஜெய்சங்கருக்கு நல்ல அனுபவம் உள்ளது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியில் தற்போது ஜெய் சங்கரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இணைந்துள்ளனர். பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் வசமும், நிதித்துறை நிர்மலா சீதாராமன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

.