ஹைலைட்ஸ்
- போட்டியில் 1,400 காளைகளும், 848 வீரர்களும் பங்கேற்கின்றனர்
- வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் நிகழ்ச்சியை காண வந்துள்ளனர்
- வெற்றி பெறுவோருக்கு கார் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும்
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் மொத்தம் 1,400 காளைகள் களத்தில் இறங்கியுள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 848 வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
போட்டியை தமிழக அமைச்சர் ஆர்.பி. உதய குமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியைக் காண தேனி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்துள்ளனர்.
இதேபோன்று வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் போட்டியை கண்டு களித்து வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் போட்டியை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் மதுரை எஸ்.பி. தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், அவர்கள் கையில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். அலங்கா நல்லூர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கார், தங்கம், வெள்ளிக்காசுகள், பைக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.