சவுதியின் செய்தி நிறுவனமான அல் அரேபியாவின் செய்தி குறிப்பில் அர்ஜெண்டினாவில் நடக்கும் மாநாட்டில் பின் சல்மான் கலந்து கொள்கிறார்.
Riyadh: இஸ்தான்புல்லில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்கி குறித்து முதல்முறையாக சவுதி அரசர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தக் கொலை வழக்கு சவுதியை பொறுத்தமட்டில் ஒரு நீங்கா கரையாக இருக்கும் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கொலையில் மன்னரின் மகனான முகமது பின் சல்மானுக்கு பங்குள்ளதாக வழக்கறிஞர்களின் வாதத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் சிஐஏவின் தகவல்கள் இதனை ஒரு திட்டமிட்ட கொலை என்று அறிவித்தது.
"இதில் தொடர்புடைய 21 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று கசோக்கி தரப்பு வாதிட்டது.
உயர்மட்ட ஆலோசனைக்குழுவில் இடம்பிடித்துள்ள 82 வயதான மோனார்ச் தனது ஆண்டறிக்கையில், "அரசாங்கம் என்பது நிதியும் மற்றும் சமத்துவத்தால் கட்டமைக்கப்பட்டது" என்று கூறியுள்ளார். அதன்படி நாடு என்றுமே கடவுளின் சட்டங்களுக்கு எதிராக செயல்படாது என்று சவுதி அரசாங்கம் கூறியுள்ளது. உலக பொருளாதாரத்தில் சவுதியின் வளர்ச்சி குறித்து பேசும் போது ''கஷோக்கியின் கொலை வழக்கில் எந்த உள்நோக்கத்துடனும் செயல்படவில்லை'' என்று கூறியுள்ளார்.
சவுதியின் செய்தி நிறுவனமான அல் அரேபியாவின் செய்தி குறிப்பில் அர்ஜெண்டினாவில் நடக்கும் மாநாட்டில் பின் சல்மான் கலந்து கொள்கிறார். இந்தக் கொலை வழக்குக்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.
நவம்பர் 30ல் துவங்கும் நிகழ்வில் இவர் துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தலைவர்களை நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் உருவாகும். இதனை எப்படி சமாளிக்கவுள்ளார் என்பது தான் சர்வதேச விவாதமாக உள்ளது.
சவுதியிலிருந்து 15 பேர் கொண்ட குழு அரசு விமானம் மூலம் அக்டோபரில் இஸ்தான்புல் அமீரகத்துக்கு சென்றுள்ளது. அவர்கள் கஷோக்கியை கொலை செய்யும் நோக்கத்தில் தான் இஸ்தான்புல் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களோடு பிரேதத்தை சுத்தப்படுத்தும் இருவரும் வந்ததாக கூறப்படுகிறது.அமெரிக்கா இந்த விஷயத்தை எளிதில் விட மாட்டோம். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என கூறிவரும் வேளையில் இந்த செயலை அமெரிக்க அதிபர் டரம்ப் சிறுபிள்ளை தனமானது என விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.