Read in English
This Article is From Dec 20, 2019

தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் வலுவாக எழுங்கள்: பல்கலைக்கழத்தின் வலைத்தளத்தை ஹேக் செய்து செய்தி வெளியிட்ட ஹேக்கர்ஸ்

தளத்தில் “ஜாமியா மாணவர்களுக்கு ஆதாரவாக டார்க் நைட்டினால் (இருளின் போர்வீரன்)ஹேக் செய்யப்பட்டது…. ஜெய் ஹிந்த்!”

Advertisement
இந்தியா Edited by

போராட்டத்தை சாக விட்டுவிடாதீர்கள்-ஹேக்கர்ஸ் வெளியிட்ட செய்தி

New Delhi:

ஜாமிய மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் வலைத்தளம் வியாழக்கிழமை ஹேக் செய்யப்பட்டது. திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மாணவர்களுக்கு அதில் செய்தி  வெளியிடப்பட்டது. 

தளத்தில் “ஜாமியா மாணவர்களுக்கு ஆதாரவாக டார்க் நைட்டினால் (இருளின் போர்வீரன்)ஹேக் செய்யப்பட்டது…. ஜெய் ஹிந்த்!”

பல்கலைக்கழகத்தின் வலைத்தளம் மூன்றாம் தரப்பினரால் கையாளப்படுகிறது. ஹேக் செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே குடியுரிமை திருத்த சட்டத்திற்க எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சிலர் மண்டி மாளிகை மற்றும் ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்களில் இணைந்துள்ளனர்.

Advertisement

மாலையில் வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களுக்கு ஹேக்கர்கள் செய்திகளை வெளியிட்டனர்.

“ஜாமியாவின் துணிச்சலான மாணவர்கள் அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடுங்கள். போராட்டத்தை சாக விட்டுவிடாதீர்கள். உங்களைத் தாக்கும்போது ஒவ்வொரு முறையும் வலுவாக எழுந்திருங்கள்! வலுவாக எழுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

Advertisement

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டினை திரும்ப பெற வேண்டும், சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும், காவல்துறையின் வன்முறையை விசாரிக்க வேண்டும் என்று நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

மாணவர்களின் போராட்டைத்தையொட்டி ஜே.என்.யூவின் துணைவேந்தரின் மெளனத்தை ஹேக்கர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

Advertisement

Advertisement