This Article is From Mar 09, 2020

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பேர் டெல்லியில் கைது

ஜஹான்ஜீப் சமி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பீக் என அடையாளம் காணப்பட்ட இணையர்கள் ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பேர் டெல்லியில் கைது

ஜஹான்ஜீப் சாமி என அடையாளம் காணப்பட்ட நபர்

New Delhi:

ஆப்கானிஸ்தானின் கோரசன் மாகாணத்தைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பிரிவுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு காஷ்மீரைச் சேர்ந்த தம்பதியினர், தெற்கு டெல்லியின் ஜாமியா நகரைச் சேர்ந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த அவர்கள்  முஸ்லீம் இளைஞர்களைத் தூண்டுவதாகவும், டெல்லியில் தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிடுவதாகவும் தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை வடிவமைப்பதில் ஐ.எஸ்.ஐ.எஸ் இருக்கிறதா என்கிற சந்தேகத்தினை இந்த கைது நடவடிக்கை ஏற்படுத்துவதாக சில சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ஜஹான்ஜீப் சமி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பீக் என அடையாளம் காணப்பட்ட இணையர்கள் ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்கள் சில முக்கியமான பொருட்களை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

உளவுத்துறை இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு மூத்த அதிகாரி, ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.கே.பி உறுப்பினர்களுடன் தம்பதியினர் தொடர்பு கொண்டு, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களை பயன்படுத்தி பயங்கரவாதத் தாக்குதல்களைத் நடத்த திட்டமிட முயற்ச்சித்திருக்கலாம் என குறிப்பிடுகிறார்.

ஜஹான்ஜீப் சமி ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார். இந்த ஜோடி "இந்திய முஸ்லிம்கள் ஒன்றுபடுங்கள்" என்ற சமூக ஊடக தளத்தையும் கொண்டிருந்தது, இது CAA மற்றும் NRC க்கு எதிராக ஆதரவைத் திரட்டுவதற்காக செயல்பட்ட தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

.