This Article is From Feb 11, 2020

சிஏஏ எதிர்ப்பு: ஜாமியா பல்கலை. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி!

சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல ஜாமியா ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்திருந்தது.

சிஏஏ எதிர்ப்பு:  ஜாமியா பல்கலை. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி!

ஜாமியா ஒருங்கிணைப்பு குழு நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்கிறது.

New Delhi:

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் பேரணி இன்று தொடங்கியுள்ளது. முன்னதாக போராட்டக்காரர்ளின் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.  

இதற்கிடையில், அணிவகுப்பு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது, ”நாங்கள் அரசியலமைப்பிலிருந்து அதிகாரத்துடன் அணிவகுத்துச் செல்வோம்” என்ற முழக்கங்களுடன் பேரணி தொடங்கியது. 

பேரணி செல்லும் வழி முழுவதும் பாதுகாப்பு படையினர் தடுப்பு அமைத்துள்ளனர். சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல ஜாமியா ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்திருந்தது. 

இதேபோன்று கடந்த ஜன.30ம் தேதி நடைபெற்ற பேரணியில் தான் சிஏஏவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவிட்டு மாணவர்களை நோக்கி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

.