This Article is From Aug 05, 2019

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக ஆதரவு!

சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கப்படுவதன் மூலம், இந்திய அரசியலமைப்பில் உள்ள அனைத்தும் இனி ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். இதன்மூலம் அம்மாநில மக்கள் பெற்று வந்த சிறப்பு அந்தஸ்து ரத்தாகும்,

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக ஆதரவு!

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு ரத்து

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 35ஏ மற்றும் 370 பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை அறிவித்தார். தொடர்ந்து, குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 

சட்டப்பிரிவு 370 என்பது ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு தன்னாட்சி அந்தஸ்தை வழங்கும் 'தற்காலிக ஏற்பாடு' ஆகும். இந்த சட்டம் மாநிலத்தில் தனது சொந்த அரசியலமைப்பை உருவாக்க அனுமதிக்கிறது. மேலும், மாநிலத்தின் மீது நாடாளுமன்றத்தின் சட்டமன்ற அதிகாரங்களுக்குள் உட்படாமல் இது கட்டுப்படுத்துகிறது.

இதனால், பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், நிதி மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்டவை தவிர்த்து மற்ற அனைத்து சட்டங்களுக்கும் மாநில அரசின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும். மேலும், சட்டப்பிரிவு 370-ன் கீழ் நாடாளுமன்றத்தால் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைகளை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது. 

இதன்மூலம் ஜம்மு- காஷ்மீரில் குடியுரிமை பெற்றவர்கள் மற்ற இந்தியர்களுடன் ஒப்பிடுகையில், குடியுரிமை, சொத்துரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவற்றில் தனித்த சட்டங்களின் கீழ் வாழ்ந்து வந்தனர். 

சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கப்படுவதன் மூலம், இந்திய அரசியலமைப்பில் உள்ள அனைத்தும் இனி ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். இதன்மூலம் அம்மாநில மக்கள் பெற்று வந்த சிறப்பு அந்தஸ்து ரத்தாகும்,

மாநிலத்தின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் ஆளுநர் எடுக்கலாம். நிரந்தர குடிமக்கள் யார் என்பதை தீர்மானிக்க முடியும், பிற மாநில மக்களும் ஜம்மு-காஷ்மீரில் அசையா சொத்துகளை வாங்க முடியும். 

இப்படிப்பட்ட இந்த 370 சட்டப் பிரிவை ரத்து செய்வதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தனது அமைச்சரவையுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. 

இந்நிலையில், ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி நவநீதிகிருஷ்ணன், ஜெயலலிதா இறையாண்மைக்கு முன்னுரிமை அளித்ததால் அதிமுகவும் ஆதரவு அளிக்கிறது எனத் தெரிவித்தார். 
 

.