This Article is From Dec 15, 2018

பாலியல் தொல்லைக்கு எதிராக, ஜம்மு-காஷ்மீரின் மாநில அரசு புதிய நடவெடிக்கை!

கடந்த வெள்ளிக்கிழமையன்று கவர்னர் சத்திய பால் மாலீக் யின் கீழ் நடந்த ஸ்டேட் அட்மினிஸ்டிரேட் கவுன்சிலில் இந்த சட்டத்திற்க்கு ஒப்புதல் அளித்து.

பாலியல் தொல்லைக்கு எதிராக, ஜம்மு-காஷ்மீரின் மாநில அரசு புதிய நடவெடிக்கை!

தக்க நடவெடிக்கைகள் எடுக்கப்படும்

Jammu:

அரசு பணியில் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அதை குற்றச்செயலாக கருதும் மசோதாவிற்கு  ஜம்மு-காஷ்மீர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் நிகழ்வுகளை தடுப்பதற்காக இதுபோன்ற சட்டத்தை கொண்டு வந்த முதல் மாநில அரசு ஜம்மு - காஷ்மீர்   என்ற பெருமையை அடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று கவர்னர் சத்திய பால் மாலீக் யின் கீழ் நடந்த ஸ்டேட் அட்மினிஸ்டிரேட் கவுன்சிலில் (எஸ்.ஏ.சி) ‘ஊழல் தடுப்பு (திருத்தச்) சட்டம்' மற்றும் காஷ்மீர் குற்றவியல் சட்டம்  ஆகிய 2 இந்த சட்டத்திற்க்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், 2018 குற்றவியல் சட்டங்கள் (திருத்த) மசோதாவின் படி ‘ரன்பீர் தண்டனை குறியீடு' நிறைவேற்றுமாறு எழுந்த கோரிக்கையின் கீழ் பாலியல் தொல்லைகள் தரும் அனைவரையும் கிரிமினல் சட்டத்தின் கீழ் தண்டனை கொடுக்கப்பட வேண்டுமென இந்த மசோதா கோரியுள்ளது.

ரன்பீர் குற்றவியல் பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதே குற்றச்செயல்களுடன் பாலியல் தொல்லைகள் கொடுப்பவர்களுக்கு 154, 161 மற்றும் 53 A பிரிவுகளை போல் பாலியல் தொல்லைகளுக்கான குற்றங்களுக்கும் இதே பிரிவின் கீழ் தண்டனைகள் தரவேண்டும் என நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

.