ஃபைசல் 2009இல் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த முதல் காஷ்மீரி என்ற பெருமையை பெற்றவர்.
New Delhi: ஷா ஃபைசல் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றவர். அரசியலுக்காக சிவில் சர்வீஸிலிருந்து விலகியவர். காஷ்மீருக்க்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது குறித்து விமர்சித்து வந்தார். இந்நிலையில் ஷா ஃபைசல் இன்று டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் வெளிநாடு செல்லவிருந்தபோது கூறப்படுகிறது. ஆனால் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் ஶ்ரீநகருக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்
ஷா பைசல் இஸ்தான்புல்லுக்குச் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை முடிவுக்கு கொண்டுவந்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து ஷா ஃபைசல் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தார்.
அரசியல் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக காஷ்மீருக்கு “அஹிம்சை அரசியல் வெகுஜன இயக்கம் தேவை” என்று அவர் ட்விட்டரில் கூறியிருந்தார்.
“அரசியல் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு காஷ்மீருக்கு நீண்ட, நீடித்த அகிம்சை அரசியல் வெகுஜன இயக்கம் தேவைப்படும். 370வது பிரிவை ஒழித்து காஷ்மீரை முடித்துவிட்டது. அரசியலமைப்பாளர்கள் போய்விட்டனர். எனவே நீங்கள் இப்போது ஒரு கைக்கூலியாகவோ அலல்து பிரிவினைவாதியாகவோத்தான் இருக்க முடியும். சாம்பலுக்கு நிழல் இல்லை” என்று ட்வீட் செய்தார்.
ஃபைசல் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் ஆகஸ் 4 முதல் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் உள்ளனர். இந்திய அரசின் காஷ்மீர் முடிவுகளை தொடர்ந்து பெரிய பின்னடைவைத் தடுக்க பெரும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கைது நடவடிக்கைகளை செய்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் குறைந்து விட்டன. ஊரங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
ஃபைசல் 2009இல் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த முதல் காஷ்மீரி என்ற பெருமையை பெற்றவர்.