This Article is From Sep 28, 2019

Jammu And Kashmir-ல் பாதுகாப்புப் படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் என்கவுன்ட்டர்!

Jammu Kashmir-ல் இன்று இரண்டு என்கவுன்ட்டர்கள் (Encounters) மற்றும் ஒரு இடத்தில் கையெறிக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Jammu And Kashmir-ல் பாதுகாப்புப் படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் என்கவுன்ட்டர்!

ஜம்மூ - ஸ்ரீநகர் (Jammu- Srinagar) நெடுஞ்சாலையில் பொது மக்கள் பயன்படுத்தும் பேருந்து ஒன்றை நிறுத்த 2 - 3 தீவிரவாதிகள் முற்பட்டபோது, ஒரு என்கவுன்ட்டர் (Encounter) சம்பவம் ஆரம்பித்தது.

New Delhi:

ஜம்மூ காஷ்மீரில் (Jammu And Kashmir) இன்று இரண்டு என்கவுன்ட்டர்கள் (Encounters) மற்றும் ஒரு இடத்தில் கையெறிக் குண்டு தாக்குதல் (Grenede attack) நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஜம்மூ - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் (Srinagar Highway) பொது மக்கள் பயன்படுத்தும் பேருந்து ஒன்றை நிறுத்த 2 - 3 தீவிரவாதிகள் முற்பட்டபோது, ஒரு என்கவுன்ட்டர் சம்பவம் ஆரம்பித்தது. இந்திய ராணுவத்தினரின் உடுப்புகளை அணிந்திருந்த தீவிரவாதிகள் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளனர். இதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர், வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்த பாதுகாப்புப் படையினர், சம்பவம் நடந்த இடத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள படோட் (Batote) பகுதியில் இந்த என்கவுன்ட்டர் சம்பவம் நடந்து வருகிறது. தொடர்ந்து அங்கு கனமழை பெய்து வருவதால் தேடுதல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல். மேலும் தீவிரவாதிகள் அங்கிருக்கும் வீடு ஒன்றுக்குள் நுழைந்து சிலரை பிணைக் கைதிகளாக அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது. உயிர்ச் சேதத்தைத் தவிர்க்க பாதுகாப்புப் படைகள் மிகவும் உஷாராக அடுத்தடுத்த அடியை எடுத்து வைத்து வருகிறதாம். 

இந்திய எல்லைக் கோட்டுக்கு அருகேயுள்ள கண்டேர்பால் பகுதியில் இரண்டாவது என்கவுன்ட்டர் சம்பவம் வெடித்துள்ளது. இந்த சம்பவதில் 2 அல்லது 3 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டிருக்கலாம் எனப்படுகிறது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இருக்கும் இடம் என்பதால், தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் வர முயன்றிருக்கலாம் என்று தகவல் தெரிந்த வட்டாரம் கூறுகிறது. இது குறித்து போலீஸ் தரப்போ, ராணுவத் தரப்போ எந்தவித அதிகாரபூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை. 

மூன்றாவதாக, கையெறிக் குண்டு சம்பவமானது, ஸ்ரீநகரின் மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடத்தில் நடந்துள்ளது. தீவிரவாதிகள் சிலர் மக்கள் உள்ள பகுதியில் கையெறிக் குண்டுகளை தூக்கியெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனப்படுகிறது. 

 

.