This Article is From Aug 05, 2019

2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர்: முழு விவரம்

ஜம்மூ-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர்: முழு விவரம்

அறிவிகப்படாத கடையடைப்பு போன்று இன்று ஜம்மு-காஷ்மீர் காணப்பட்டது.

New Delhi:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமித்ஷா, “ஜம்மூ காஷ்மீர் மாநிலம் "மறுசீரமைக்கப்படும்" என்று கூறினார். அதன்படி, ஜம்மூ-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து, குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அமித்ஷா கூறும்போது, ஜம்மு-காஷ்மீருக்கு முன்மொழியப்பட்ட யூனியன் பிரதேச நிலை என்பது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் தூண்டப்பட்டு "நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நிலைமையை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.

37eg18i8

ஜம்மு-காஷ்மீரை டெல்லியை போன்றே, சட்டமன்றத்துடன் கூடிய ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை சட்டமன்றம் இல்லாத ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டபிரிவு 35ஏ ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ப்ரேத்யேக சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது, மாநிலத்தின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் யார் என்பதை தீர்மானிக்கவும், அவர்களுக்கு சிறப்பு உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கவும் அதிகாரம் அளிக்கிறது.

சட்டப்பிரிவு 35ஏ-படி, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு இங்கு சொத்து வாங்க முடியாது, அரசு வேலை கிடைக்காது. ஜம்மு-காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை பெற்ற பெண் வேறு மாநிலத்தை சேர்ந்தவரையோ அல்லது நிரந்தர குடியுரிமை பெறாதவரையோ திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படாது. அந்த பெண்ணின் சொத்திலும் உரிமை கொண்டாட முடியாது.

இந்த சட்டப்பிரிவுகள் "அரசியலமைப்பை பாதிக்கக்கூடியவை" என்றும் அவை பாரபட்சமானவை என்றும் அவை மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்றும் பாஜக தெரிவித்து வந்தது. இதனிடையே, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காஷ்மீரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வந்தனர்.

இதனால், அங்கு கடும் பதற்றம் நீடித்து வந்தது. தொடர்ந்து, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் மூத்த அரசியல் தலைவர் சஜாத் லோன் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதனால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? அல்லது மாநிலம் மூன்றாக பிரிக்கப்படுமா? என்பது போன்ற பெரும் சந்தேகங்கள் நிலவி வந்தது. இந்நிலையில், அவை அனைத்தும் தற்போது நடந்து முடிந்துள்ளது.

.