J&K President Rule: ராம் நாத் கோவிந்த்
New Delhi: Jammu And Kashmir President Rule: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் 6 மாதம் முடிந்த நிலையில், நள்ளிரவு முதல் ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்து வந்தது. இதைத்தொடர்ந்து, இந்த இருகட்சிகளுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டது, இதில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக கடந்த ஜூன் மாதம் பாஜக அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபையும் கலைக்கப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவந்த கவர்னர் ஆட்சி இன்றுடன் முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்தது.
இதைத்தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறது.