This Article is From Aug 26, 2019

ஜி-7 உச்சி மாநாடு: டிரம்ப் - பிரதமர் மோடி இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் "மத்தியஸ்தம்" செய்வது குறித்து பேசியதுடன், இந்த பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஜி-7 உச்சி மாநாடு: டிரம்ப் - பிரதமர் மோடி இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

ஜி7 மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

New Delhi:

ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், அங்கு அமெரிக்க அதிபர் டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதில் காஷ்மீரின் தற்போதைய நிலைமை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் "மத்தியஸ்தம்" செய்ய விரும்புவது குறித்து பேசியதுடன், இந்த பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி முதலில், பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு சென்றார், அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 2 விமான விபத்துகளில் உயிரிழந்த இந்தியர்களின் நினைவாக பாரீசில் நிறுவப்பட்டு உள்ள நினைவுச் சின்னம் ஒன்றை திறந்து வைத்தார்.

அத்துடன் பிரான்சில் வாழும் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்றார். பின்னர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் எடோவர்ட் பிலிப் ஆகியோருடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

edbn9gu8

இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் அமீரகம் சென்ற பிரதமர் மோடி, அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீதை மோடி சந்தித்து இருதரப்பு, பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயீத்' விருதை அபுதாபி பட்டத்து இளவரசர் முகமதி பின் சயீத் வழங்கி கவுரவித்தார்.

பின்னர் பஹ்ரைன் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து, பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 250 இந்திய கைதிகளை விடுவிப்பதாக அந்த நாடு அறிவித்தது.

3k2pp2fg

தொடர்ந்து, பஹ்ரைனில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று மீண்டும் பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் ‘ஜி-7' மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். குறிப்பாக சுற்றுச்சூழல், காலநிலை, பெருங்கடல் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்கள் தொடர்பான அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.

இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை என்றபோதும், அந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், அங்கு, அமெரிக்க அதிபர் டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 370வது சட்டபிரிவு நீக்கம் குறித்த பிரச்சினையை இந்தியாவின் உள் பிரச்சினையாக வாஷிங்டன் பார்க்கும்போது, பிரதமர் மோடியும் டிரம்பும் சந்திக்கும் போது ஜம்மு-காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டது மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விவாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்கும் நிலையில், காஷ்மீரில் மதவாத பதட்டங்களைக் குறைப்பதற்கும், மனித உரிமைகளுக்கான மரியாதையை நிலைநிறுத்துவதற்கும் பிரதமர் மோடி எவ்வாறு திட்டமிட்டுள்ளார் என்பதை அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புகிறார் என அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

.