Jammu weather image: ஜம்மு-காஷ்மீரில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு!
Jammu and Kashmir weather news: ஜம்மு-காஷ்மீரில் திங்கட்கிழமை முதல் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அடுத்த நான்கு நாட்களுக்கு வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், கிழக்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் வார இறுதி வரை அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி, லியாகத் சவுத்ரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ஆற்றின் குறுக்கே மற்றும் ராஜோரி மாவட்டத்தின் உயர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலத்த மழையை காரணமாக எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தானி மண்டி, ராஜோரி மாவட்டம், நவ்ஷெரா மற்றும் மஞ்சா கோட் போன்ற தாவி ஆற்றின் அருகே வசிக்கும் மக்களை நாங்கள் எச்சரித்திருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் பலத்த மழை பெய்தால், ஆற்றின் ஓட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால் நாங்கள் அவர்களுக்கு அறிவித்துள்ளோம் என்று அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உஜ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக புதன்கிழமை பதினைந்து பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சரியான நேரத்தில் ராஜ்பாக் பகுதியில் ஆற்றின் அருகே தற்காலிக தங்குமிடங்களில் சிக்கிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரின் உயிரைக் காப்பாற்றியதாக போலீஸ் அதிகாரி ஒருவரை செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது. ராஜோரி மாவட்ட நிர்வாகம் தாழ்வான பகுதிகளிலும், ஆறுகளிலும் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Jammu: ஜம்முவில் வீடுகளில் புகுந்த வெள்ளநீர்
ஜம்முவில் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்கிழமை முதல் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் மூழ்கியுள்ளன. வெள்ள நீர் பலரின் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
(Inputs from PTI & ANI)