This Article is From Feb 19, 2019

காஷ்மீர் தாக்குதல்: சவூதி மூலமாகவும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா திட்டம்

சவூதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் இன்று இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானின் அத்துமீறல்கள் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் தாக்குதல்: சவூதி மூலமாகவும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா திட்டம்

பிரதமர் நரேந்திர மோடியுடன் சவூதி இளவரசர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஹைலைட்ஸ்

  • சவூதி இளவரசர் இன்றிரவு டெல்லி வருகிறார்
  • பாகிஸ்தானை சவூதி இளவரசர் சல்மான் பாராட்டி பேசியிருக்கிறார்
  • இந்தியா - பாக். பதற்றத்தை தணிக்க முயற்சி எடுப்பதாக சவூதி கூறியுள்ளது
New Delhi:

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தது தொடர்பாக சவூதி மூலமாகவும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் இன்று இந்தியா வருகிறார். நாளை அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது பாகிஸ்தானின் அத்துமீறல்கள் குறித்து சவூதியிடம் தெரிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு வர்த்தக ரீதியில் பதிலடி கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் உடனான வர்த்த உறவை சவூதி வலுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சவூதி இளவரசர் உடனான மோடியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த செய்தி  தொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்…

----

  1. சவூதி பட்டத்து இளவரசரின் பெயர் முகம்மது பின் சல்மான். இவரை சுருக்கமாக எம்.பி.எஸ். என்று அழைப்பார்கள். மிகப்பெரும் வர்த்தக குழுவுடன் இந்தியா வருகிறார் எம்.பி.எஸ்.
  1. இந்தியாவில் 2 நாட்கள் பயணத்தை சல்மான் மேற்கொள்கிறார். நாளை பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
  1. முன்னதாக பாகிஸ்தானுக்கு சென்றிருந்த சல்மான் அஞ்கு முக்கிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இருந்தார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற மாநாட்டின் முடிவில் கூட்டு அறிக்கையை சவூதியும், பாகிஸ்தானும் வெளியிட்டது. அதில் தெற்காசிய பகுதியில் அமைதியை நிலை நிறுத்த தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது.
  1. புல்வாமாவில் 40 துணை ராணுவத்தினர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்ததற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார்.
  1. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு எதிரான வாசகங்கள், சவூதி – பாகிஸ்தான் கூட்டு அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
  1. நாளை மோடி – சல்மான் சந்திப்பின்போது பாகிஸ்தானின் அத்துமீறல்கள் குறித்து பேசப்பட வாய்ப்புள்ளது.
  1. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்ளாத வரையில், பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.
  1. இந்தியாவின் 8 சக்தி மிக்க கூட்டாளிகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. அந்நாட்டு இளவரசரின் வருகையின்போது இரு நாட்டின் உறவுகள், வர்த்தகம், முதலீடு, பத்திரிகை துறை, கலாசாரம் உள்ளிட்டவற்றில் அடுத்த கட்டத்தை எட்டுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
  1. இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு முகம்மது பின் சல்மான் சீனாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
  1. பத்திரிகையாளர் கசோக்கியின் கொலைக்குப் பின்னர் சர்வதேச நெருக்கடிகளை சவூதி சந்தித்து வருகிறது. இந்த நிலையில் சல்மானின் தெற்காசிய நாடுகளின் சுற்றுப் பயணம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : 12 மணி நேர எண்கவுண்டர்! - புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

.